சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மனித தோலில் செய்த பிளாஸ்திரி!

Added : செப் 06, 2021
Share
Advertisement
நாள்பட்ட புண்கள் மீது, செயற்கை 'பிளாஸ்திரி' போடுவது எல்லோருக்கும் ஏற்றதல்ல. பலருக்கு ஒவ்வாமை ஏற்படும். எனவேதான், ஜெர்மனியிலுள்ள 'பிரான்ஹோபர் இன்ஸ்டிடியூட்டின்' மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், புதுவிதமான பிளாஸ்திரியை உருவாக்கியுள்ளனர்.அது முற்றிலும் மனித தோலில் இருந்து எடுத்த புரதங்களை வைத்தே தயாரிக்கப்பட்டது. மனித தோலுக்கு, இழுவைத் தன்மையைத் தரக்கூடியது
 மனித தோலில் செய்த பிளாஸ்திரி!

நாள்பட்ட புண்கள் மீது, செயற்கை 'பிளாஸ்திரி' போடுவது எல்லோருக்கும் ஏற்றதல்ல. பலருக்கு ஒவ்வாமை ஏற்படும். எனவேதான், ஜெர்மனியிலுள்ள 'பிரான்ஹோபர் இன்ஸ்டிடியூட்டின்' மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், புதுவிதமான பிளாஸ்திரியை உருவாக்கியுள்ளனர்.

அது முற்றிலும் மனித தோலில் இருந்து எடுத்த புரதங்களை வைத்தே தயாரிக்கப்பட்டது. மனித தோலுக்கு, இழுவைத் தன்மையைத் தரக்கூடியது 'எலாஸ்டின்' என்ற உயிரி பாலிமர். எலாஸ்டினுக்குள் உள்ள புரதக் கட்டமைப்பின் பெயர் 'ட்ரோபோ எலாஸ்டின்.' இந்த புரதத்தை வைத்து, 'எலக்ட்ரோ ஸ்பின்னிங்' முறையில் மிக மெல்லிய ட்ரோபோஎலாஸ்டின் நேனோ இழைகளை விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த இழைகளை நெய்து, பிளாஸ்திரி போன்ற பெரிய பட்டைகளை ஜெர்மனிய ஆய்வாளர்கள் தயாரித்தனர்.

இந்த பட்டை, மனித தோலுக்கு மிகவும் ஏற்றதாக, துாக்கி எரிந்தால், விரைவில் மட்கும் தன்மை உடையதாக இருப்பதாக, முதற்கட்ட சோதனைகளில் தெரியவந்துள்ளது.சர்க்கரை நோய், தோல் அல்சர் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு, ட்ரோபோஎலாஸ்டின் பிளாஸ்திரிகள், நோய்தீர்க்கும் மருந்தாக அமையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X