சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கடலில் கார்பன் எடுக்கும் உத்தி!

Added : செப் 06, 2021
Share
Advertisement
காற்றில் சேரும் கார்பன் டை ஆக்சைடு மாசு, சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு. கார்பன் மாசு, படிப்படியாக கடல் நீர்ப்பரப்பின் மேல் இறங்கி, கடல் நீரை அதிக அமிலத் தன்மை கொண்டதாக ஆக்குகிறது. இதை தடுக்க பல வழிகள் உண்டு. அதில் தற்போது பரவலாக இருப்பது, காற்றிலிருந்து நேரடியாகவே கார்பன் டை ஆக்சைடை திரும்ப எடுத்து, வேறு வகையில் பயன்படுத்திக்கொள்வது.ஆனால், கடல் நீரில் கரைந்துவிட்ட
கடலில் கார்பன் எடுக்கும் உத்தி!

காற்றில் சேரும் கார்பன் டை ஆக்சைடு மாசு, சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு. கார்பன் மாசு, படிப்படியாக கடல் நீர்ப்பரப்பின் மேல் இறங்கி, கடல் நீரை அதிக அமிலத் தன்மை கொண்டதாக ஆக்குகிறது. இதை தடுக்க பல வழிகள் உண்டு. அதில் தற்போது பரவலாக இருப்பது, காற்றிலிருந்து நேரடியாகவே கார்பன் டை ஆக்சைடை திரும்ப எடுத்து, வேறு வகையில் பயன்படுத்திக்கொள்வது.

ஆனால், கடல் நீரில் கரைந்துவிட்ட கார்பன் டை ஆக்சைடு, கடல் வாழ் உயிரினங்களை மெல்லக் கொல்வதோடு, மீண்டும் கடல் நீர் காற்றில் ஆவியாக கலக்கும்போதும், பல வேதி மாசுகளை அது காற்றில் சேர்க்க நேரிடுகிறது. எனவேதான், நீரில் கலந்த கார்பன் மாசினை எடுக்க, 'நேனோ ஜார்' தொழில்நுட்பம் என்ற ஒன்று வந்துள்ளது.

பெயரில் ஜாடி இருந்தாலும், நேனோ ஜார் என்பது ஒரு கரிம திரவம்தான். தாமிர அயனி உள்ளிட்ட சில வேதிப் பொருட்கள் கலந்த திரவம் அது. இதை கடல் நீரில் கலந்தால், கார்பனேட், குரோமேட், ஆர்சனேட், பாஸ்பேட் உள்ளிட்ட பல மாசுகளின் அயனிகளுடன் ஊடாடி செயலிழக்க செய்துவிடும். பிறகு, இந்த மாசுகள் அனைத்தும் கடலின் மேற்பரப்பில் மிதக்கும். அதை எடுத்து, மேலும் பதப்படுத்தினால் வேறு பயனுள்ள பொருட்களை தயாரிக்க முடியும், இது குறித்த ஆய்வு, 'அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி' இதழில் வெளிவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X