சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மின்கலன்களில் உப்பு!

Added : செப் 06, 2021
Share
Advertisement
மி ன் கலன்களின் இலக்கணமே, அதிக மின்னாற்றலை, அதிக நேரம் தேக்கி வைப்பதுதான். அதற்கு ஏற்ற வேதிப் பொருட்களைத் தேடும் வேட்டை தற்போது பலநாடுகளில் நடந்து வருகிறது. லித்தியம் அயனி 'பேட்டரி'களுக்கு மாற்று மின்கலன்களைத் தேடுவதுதான் இவற்றின் அடிப்படை.அந்த வகையில், சோடியம் எனப்படும் உப்பினை மையமாகக் கொண்டு இயங்கும் புதிய மின்கலன் ஒன்றை சீனாவின் சி.ஏ.டி.எல்., நிறுவனம்
மின்கலன்களில் உப்பு!

மி ன் கலன்களின் இலக்கணமே, அதிக மின்னாற்றலை, அதிக நேரம் தேக்கி வைப்பதுதான். அதற்கு ஏற்ற வேதிப் பொருட்களைத் தேடும் வேட்டை தற்போது பலநாடுகளில் நடந்து வருகிறது. லித்தியம் அயனி 'பேட்டரி'களுக்கு மாற்று மின்கலன்களைத் தேடுவதுதான் இவற்றின் அடிப்படை.அந்த வகையில், சோடியம் எனப்படும் உப்பினை மையமாகக் கொண்டு இயங்கும் புதிய மின்கலன் ஒன்றை சீனாவின் சி.ஏ.டி.எல்., நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மின்கலன், 15 நிமிடங்கள் வேகமாக மின்னேற்றம் செய்தாலே, 80 சதவீதம் நிரம்பிவிடுகிறது.

மேலும், -20 டிகிரி குளிரிலும் இந்த பேட்டரி, 90 சதவீத மின்னாற்றலைத் தேக்கி வைத்திருக்கும் திறன் கொண்டது.பிரபல மின் வாகனமான 'டெஸ்லா' முதல், உலகெங்கும் பல மடிக்கணினிகள், 'ஸ்மார்ட்போன்'களுக்கு மின்கலன்களை சி.ஏ.டி.எல்., தயாரித்துத் தருகிறது. லித்தியம் அயனி மின்கலன்களைவிட, சிறப்பாக செயல்படும் சோடியம் அயனி மின் கலன்களை இன் பெருமளவில் தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மின் கலன்களுக்கு உள்ளே வித்தியாசமான பொருட்களை பயன்படுத்துவதே சி.ஏ.டி.எல்லின் உத்தி. மின் கலன்களின் இரு மின் முனைகளில் வேறு பொருட்களை பயன்படுத்துகிறது சி.ஏ.டி.எல். அதேபோல லித்தியம் உலோகத்திற்கு பதில், சோடியம் அயனியை பயன்படுத்துகிறது, சோடியம் பேட்டரிகள் வர்த்தக ரீதியில் விரைவில் சந்தைக்கு வரவிருக்கின்றன. அப்போது, சீனாவைச் சேர்ந்த சி.ஏ.டி.எல்லின் கை ஓங்கும் என்று வல்லுனர்கள் கணிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X