சித்ராலயா கோபுவும்,நானும்

Updated : செப் 06, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
எத்தனை காலமானாலும் நம்மை சிரிக்க வைக்கும் காதலிக்க நேரமில்லை,காசேதான் கடவுளடா,உத்தரவின்றி உள்ளே வா உள்ளீட்ட பல்வேறு நகைச்சுவை படங்களின் கதை,வசனகர்த்தவானா சித்ராலயா கோபு தன்னைப்பற்றி தாமரை பிரதர்ஸ் வெளியிட்டுள்ள அசோகர் உங்க மகரா புத்தகத்தை படித்துவிட்டு சிரிப்புக்கு பஞ்சமில்லாத புத்தகமிது என்று வாழ்த்துரை வழங்கியுள்ளார்.1960-70 களில் கொடிகட்டிப் பறந்தlatest tamil news


எத்தனை காலமானாலும் நம்மை சிரிக்க வைக்கும் காதலிக்க நேரமில்லை,காசேதான் கடவுளடா,உத்தரவின்றி உள்ளே வா உள்ளீட்ட பல்வேறு நகைச்சுவை படங்களின் கதை,வசனகர்த்தவானா சித்ராலயா கோபு தன்னைப்பற்றி தாமரை பிரதர்ஸ் வெளியிட்டுள்ள அசோகர் உங்க மகரா புத்தகத்தை படித்துவிட்டு சிரிப்புக்கு பஞ்சமில்லாத புத்தகமிது என்று வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
1960-70 களில் கொடிகட்டிப் பறந்த சினிமா நிறுவனம்தான் சித்ராலயா.தேனிலவு,காதலிக்க நேரமில்லை,நெஞ்சில் ஒர் ஆலயம், என்று அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கு மறக்கமுடியாத பல படங்களை தந்த நிறுவனம் அது.


latest tamil news


சித்ராலயா படங்கள் என்றால் ஒன்று முக்கோண காதல் கதையாக இருக்கும் அல்லது சோக்தை பிழிந்து கொடுக்கும் குடும்ப கதையாக இருக்கும் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அந்தப் படத்தில் வயிறு குலுங்கவைக்கும் சிரிப்பு நிச்சயம் இருக்கும் அந்த சிரிப்புக்கு சொந்தக்காரர்தான் சித்ராலயா கோபு.


latest tamil news


இயக்குர் ஸ்ரீதர்,கேமிராமேன் வின்சென்ட்,ஸ்டில்ஸ் அருணாசலம்,இயக்குனர் சி.வி.ராஜேந்திரன்,கோபு ஆகியோர் சேர்ந்து உருவாக்கியதுதான் சித்ராலயா நிறுவனம் இந்த அணியில் தற்போது கோபு மட்டுமே நம்முடன் சித்ராலயா கோபுவாக இருக்கிறார்.
கடந்த மாதம் தனது 90 வது வயதைக் கொண்டாடிய கோபுவை பெருமைப்படுத்தும் விதமாக தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அசோகர் உங்க மகரா என்ற தலைப்பில் சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள் என்ற புத்தகம் பிரசுரமானது.
60 படங்களுக்கு கதை,வசனம் எழுதி,27 படங்களை இயக்கியுள்ள கோபுவின் நகைச்சுவை அனுபவங்களை கொண்டுள்ள இந்த புத்தகம் கொரோனாவால் தொலைந்து போன சிரிப்பை நிச்சயம் மீட்டுத்தரும்.
புத்தக ஆசிரியரும் தினமலர் புகைப்பட நிருபருமான நான் வாழும் நகைச்சுவை இமயமான சித்ராலயா கோபுவை சத்தித்து பழத்தட்டுடன் புத்தகத்தை சமர்ப்பித்து ஆசி பெற்றேன்
மறுநாளே புத்தகத்தை படித்துவிட்டு பிரமாதமாக வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். எனது அனுபவங்கள் தினமலர் வாரமலரில் தொடராக வந்த போதே என்னை பெரிதும் மகிழ்சிக்கு உள்ளாக்கியது இப்போது புத்தகமாக வந்திருப்பது இன்னும் சிறப்பாக உள்ளது. உடனே உட்கார்ந்து படித்தேன் ரசித்தேன் சிரிப்புக்கு பஞ்சமில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
நீங்களும் இந்த புத்தகத்தை படித்து பழம் பெருமையான விஷயங்களை தெரிந்து கொள்ளவும் அன்றைய சினிமா வளர்ந்த கதையை புரிந்து கொள்ளவும் யாரையும் துளியும் காயப்படுத்தாமல் நகைச்சுவையாக எழுத முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவரான சித்ராலயா கோபுவின் நகைச்சுவையை அறிந்து கொள்ளவும் இந்த புத்தகம் உதவும்.
புத்தகம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:1800 425 7700 (டோல் ப்ரீ எண்)நேரம் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை.
என் மீது அன்பு கொண்டவர்கள் இந்த புத்தகத்தை வாங்கிப்படிக்கும்படி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி!
-எல்.முருகராஜ்Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
11-செப்-202110:53:23 IST Report Abuse
JeevaKiran விலை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X