தமிழகத்தில் மொட்டைதான் இலவசமாக கிடைக்கிறது: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

Updated : செப் 06, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (57) | |
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒன்றாக உள்ளது,'' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலைக் காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால், மேலும் அவகாசம் கோரி மாநிலத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
ADMK, Jayakumar, Criticises, Tamilnadu, Government, அதிமுக, முன்னாள் அமைச்சர், ஜெயக்குமார், கிண்டல், தமிழகம், தமிழக அரசு

சென்னை: ‛‛தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒன்றாக உள்ளது,'' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலைக் காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால், மேலும் அவகாசம் கோரி மாநிலத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது.

இதில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். ஆலோசனைக்கு பின்னர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் ஆட்சி பயந்துகொண்டு தேர்தலைத் தள்ளிவைப்பதாக தி.மு.க., அப்போது சொன்னது. இப்போது இவர்களும் பயத்தினால்தான் தேர்தலைத் தள்ளிப்போட முயல்கின்றனரா?


latest tamil news


தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை தி.மு.க., அளித்தது. நீட் விலக்கு, மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை, முதியோருக்கு ரூ.1,500 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும், டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைப்பு, கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் ரத்து என, எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இன்றைக்குத் தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும் அடித்துக் கொள்ளலாம். தமிழக மக்கள் முழுமையாக மொட்டை அடிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
07-செப்-202108:09:44 IST Report Abuse
HONDA நீங்க தான் ஓசியில முதல் மொட்டை அடிசிகிட்டிங்ளா
Rate this:
Cancel
07-செப்-202107:03:03 IST Report Abuse
அப்புசாமி உங்க ஆட்சியில் நீங்க மக்களை ஏகத்துக்கு மொட்டை அடிச்சீங்கன்னு உளவுத்துறை தகவல் போயிருக்காம். இப்போ, அவிங்க மக்களை மொட்டை அடிக்க எதுவுமே இல்லைன்னு கடுப்பு வேற. இப்போதைக்கு இலவசமா மொட்டை அடிச்சு, கோவில்கள் செலவில் கணக்கு காட்ட ஸ்கெட்ச் போடறாங்க. இலவசம்னு எதுவுமே கிடையாதுன்னு, மக்ஜளிடமிருந்து உருவிதான் மக்களுக்கு போடறாங்கன்னு மக்களுக்கு புரியாத வரை இது மாதிரி மொக்கை, மன்னிக்கவும் மொட்டை திட்டங்கள் தொடரும்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
07-செப்-202103:25:27 IST Report Abuse
meenakshisundaram என்னவோ போடா மாதவா இந்த ஜெயக்குமார் இத்தினி நாள் எங்கே தான் போனாருன்னு தேடிக்கினு இருந்தேன் .எல்லா ஆன்னா திமுக அமைச்சர்களும் இன்னும் உள்ளேயே இருக்காதீங்க ஐயா .வெளியே வாங்க .கறுத்த சொல்லுங்க ப்ளீஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X