சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., அப்துல்லா: 'பாங்க் ஆப் தமிழ்நாடு' குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழகத்தில் இந்த வங்கி துவங்கப்படும். இந்த வங்கியில், தமிழக அரசு தான் பங்குதாரராக இருக்கும். மற்ற வங்கிகளில் முதலீடு செய்யும் தமிழர்கள், 'பாங்க் ஆப் தமிழ்நாடு' வங்கியில் முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'டவுட்'

'டவுட்' தனபாலு

ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., அப்துல்லா: 'பாங்க் ஆப் தமிழ்நாடு' குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழகத்தில் இந்த வங்கி துவங்கப்படும். இந்த வங்கியில், தமிழக அரசு தான் பங்குதாரராக இருக்கும். மற்ற வங்கிகளில் முதலீடு செய்யும் தமிழர்கள், 'பாங்க் ஆப் தமிழ்நாடு' வங்கியில் முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'டவுட்' தனபாலு: எல்லாவற்றிலும் தமிழ்நாடு என வலியுறுத்தி வரும், தி.மு.க., அரசு, வங்கியையும் தமிழ்நாடு என்ற பெயரில் துவக்க உள்ளது பலவித, 'டவுட்'டுகளை ஏற்படுத்துகிறது. போகிற போக்கை பார்த்தால், தமிழகத்திற்கு என தனி ரிசர்வ் வங்கியை துவக்கி, தமிழின காவலர்கள் படங்களுடன் கரன்சி நோட்டுகளை அச்சிட்டு, புழக்கத்தில் விட்டு விடுவரோ என்ற விபரீத, 'டவுட்'டும் ஏற்படுகிறது!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
பல இடங்களில் கல்லுாரிகள் கிராமங்களிலும், விடுதிகள் நகரங்களிலும் உள்ளன. சில விடுதிகள் கல்லுாரிகளுக்கு அருகில் இருந்தாலும், கல்லுாரியும், விடுதியும் வேறு மாவட்டத்தில் இருப்பதாகக் கூறி, விடுதிகளில் தங்க இடம் மறுக்கப்படுகிறது. எனவே, அருகில் விடுதிகளே இல்லாத கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களை, அருகிலுள்ள தனியார் விடுதிகளில் சேர்க்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: இதுபோன்ற கோரிக்கையை வழக்கமாக, தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி போன்றவை தான் வலியுறுத்தும். அதற்கு முன், நாம் சொல்லி வைத்து விட வேண்டும் என துடிக்கிறீர்களோ என்ற, 'டவுட்' விடுதி மாணவர்களுக்கு வந்திருக்கும்!



பத்திரிகை செய்தி:
துபாயில் சிகிச்சை பெற்று வரும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சிகிச்சைக்கு உதவும் செவிலியர்களுடன் இருக்கும் தன் புகைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் 'நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த, சத்ரியன் திரைப்படத்தை, என் சிகிச்சைக்கு உதவி புரியும் செவிலிய சகோதரிகளுடன் பார்த்தேன்' என பதிவிட்டுள்ளார்.

'டவுட்' தனபாலு: அந்த படமும், விஜயகாந்த் உட்கார்ந்திருக்கும், 'போசும்' நிச்சயம் தமிழக அரசியல் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கத் தான் செய்யும் என்பதில், 'டவுட்டே' இல்லை. ஏனெனில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக செயல்படாத தலைவராக இருக்கும் அவர், நிஜ கேப்டன் போல துபாயிலிருந்து தமிழகத்தில் குதித்து விட்டால், சில கட்சிகள் ஆட்டம் காண்பது உறுதி என்றும், பேச்சு எழுகிறது!

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-செப்-202115:16:59 IST Report Abuse
D.Ambujavalli கட்சியின் முகவரி கூட பலருக்கு மறந்துவிட்டது மனைவியோ டெபாசிட் கூட வாங்க முடியவில்லை இந்நிலையில் தொண்டர்களுக்கு தெம்பளிக்க கேப்டன் இந்தப்படத்துடன் அறிக்கை விட்டிருக்கலாம் எவ்வாறாயினும், நலம் பெற்று மீண்டு வர வேண்டுவோம்
Rate this:
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
07-செப்-202113:21:06 IST Report Abuse
sathish நான் நினைக்கிறன் அங்கேயும் விஜயகாந்துக்கு டூப் போட்டாச்சுன்னு
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
07-செப்-202109:20:00 IST Report Abuse
Elango இந்திய மாநிலங்கள் அனைத்தும் வங்கிகளை உருவாகி வருகின்றனர் தமிழ்நாடு மட்டும் வங்கியை அதன் பெயரில் திறக்காமல் இருந்தது அது திமுக நிறைவேற்ற போகிறது இது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல விசயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X