சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

வேலையை ஆரம்பிக்கலாம்!

Added : செப் 06, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வேலையை ஆரம்பிக்கலாம்!எஸ்.கணேஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்சியில் 100 கோடி ரூபாய் செலவில் 135 அடியில், ஈ.வெ.ரா.,வுக்கு சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாம்.'செய்வன திருந்த செய்' என்று ஒரு பொன்மொழி உண்டு. அதை தி.மு.க.,விற்கு நினைவுப்படுத்துகிறோம்.சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவை கட்டமைத்த சர்தார் வல்லபபாய் படேலுக்கு, 2018ல், குஜராத்


வேலையை ஆரம்பிக்கலாம்!எஸ்.கணேஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்சியில் 100 கோடி ரூபாய் செலவில் 135 அடியில், ஈ.வெ.ரா.,வுக்கு சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாம்.'செய்வன திருந்த செய்' என்று ஒரு பொன்மொழி உண்டு. அதை தி.மு.க.,விற்கு நினைவுப்படுத்துகிறோம்.சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவை கட்டமைத்த சர்தார் வல்லபபாய் படேலுக்கு, 2018ல், குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றங்கரையில், 600 அடி உயர சிலை அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்றைக்கு தி.மு.க., ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது என்றால், அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது ஈ.வெ.ரா., தான்; அதில் எந்த சந்தேகமும் இல்லை.அப்படிப்பட்டவருக்கு நிறுவப்படும் சிலையானது சரித்திரம் படைக்க வேண்டும் அல்லவா...எனவே, 100 அடி உயர சிலை எல்லாம் வேலைக்காகாது; நாட்டில் இது போன்றதொரு சிலை இதுவரை வேறு எங்கும் அமைந்ததில்லை என வியக்கும் அளவுக்கு உயரமானதாக இருக்க வேண்டும்.
சர்தார் வல்லபபாய் படேலை விட, ஈ.வெ.ரா., எந்த விதத்தில் குறைந்தவர்? நாட்டின், 'சுதந்திரத்திற்காக' அரும்பாடுப்பட்டவர் அல்லவா அவர்?படேலுக்கே 600 அடி உயரத்தில் சிலை இருக்கும் போது, ஈ.வெ.ரா.,வுக்கு குறைந்தபட்சம் 1,000 அடி உயரத்திலாவது உருவச்சிலை நிறுவ வேண்டாமா?ஒதுக்கீடு தொகையை 100 கோடி ரூபாய் என்பதை, 1,000 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டால், விஷயம் முடிந்தது; அவ்வளவு தானே?அட, 1,000 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என கேட்காதீர்... தமிழக அரசிடமும் அவ்வளவு தொகை தேறாது. ஏற்கனவே, 6.10 லட்சம் கோடி ரூபாய் கடனில் உழன்று கொண்டுள்ளது.
பணம் வசூலிப்பது மட்டுமே தி.மு.க.,வின் பணி. அங்கிருந்து ஒரு நயா பைசா கூட கிடைக்காது. அப்படியென்றால், சிலை நிறுவ நிதி? உலக வங்கி என்ற ஒன்று எதற்காக உள்ளது?அங்கே சென்று கதவை தட்டி, முட்டி மோதி கடன் வாங்கி வர வேண்டும். 3,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதில் 2,000 கோடி ரூபாயை ஆளுங்கட்சியினர் 'ஆட்டை'யை போடவும் இத்திட்டம் உதவும்.'மாடும் மேய்ச்சாச்சு; மச்சானுக்கு பொண்ணும் பார்த்தாச்சு' என்ற சொலவடை மாதிரி, ஈ.வெ.ரா.,வுக்கு சிலை வைத்தது போலும் ஆயிற்று; ஆளுங்கட்சியினரும், 'கமிஷன்' அடிச்சதும் போலும் ஆயிற்று. என்ன சரி தானே?


எங்கெங்கு பதுங்கி உள்ளனரோ?அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாடு போரில் சந்தித்த உயிரிழப்புகளை விட, பயங்கரவாதிகளின் சதி செயலால் ஏற்பட்ட உயிர் பலிகள் தான் அதிகமாகும். மஹாராஷ்டிரா, டில்லி உட்பட வடமாநிலங்களில் தான் மத அடிப்படைவாதிகளால் அதிகளவில் பயங்கரவாத செயல்கள் அரங்கேறும்.ஆனால் அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில், 1998ல் நடந்த கோவை தொடர் குண்டுவெடிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாமும் பயங்கரவாதத்தின் கொடுமையை அனுபவித்தோம். அதில், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்பது வேறு விஷயம்.
மதத்தின் மீது வெறியுடைய சிலர், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றனர். அதனாலேயே, சதி செயல்கள் நிகழ்ந்து ஏராளமான உயிர்கள் பலியாகின்றன.புனே, டில்லி, மும்பை ஆகிய இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய, 'இந்தியன் முஜாகிதீன்' இயக்கத்தை சேர்ந்த அஷ்ரப் அலி, 2014ல், பரங்கிபேட்டை பள்ளிவாசலில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டான்.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு எண்ணிக்கையில் ஐ.எஸ்., தீவிரவாதிகள் நடமாட்டம் இருக்கிறது என, கடந்த ஆண்டு ஜூலையில், ஐ.நா., சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.சில நாட்களுக்கு முன், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கேரளாவில் இரண்டு பெண்களை, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இப்படி இன்னும் எத்தனை பேர், எங்கெங்கு பதுங்கி உள்ளனர் என தெரியவில்லை. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புகள் மிக அதிகம்.
மத்திய புலனாய்வு துறை மற்றும் தமிழக உளவுத்துறை அதிகாரிகள் மிகவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.பாதுகாப்பாக, அமைதியாக உள்ள நம் தேசத்திற்குள் பயங்கரவாதிகளை அனுமதிக்க மாட்டோம் என ஒவ்வொரு இந்திய குடிமகனும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.


தீக்குளிப்புக்கு முற்றுப்புள்ளி எப்போது?ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கள் கிழமைதோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும்.சில ஆண்டுகளாக அக்கூட்டம் நடக்கும் அன்று, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களில் சிலர், தங்களின் பிரச்னை தீராத காரணத்தால், தீக்குளிப்புக்கு முயற்சிக்கின்றனர்.
அதில் ஈடுபடும் பெரும்பாலானோர் காப்பாற்றப்பட்டாலும், சிலர் பலியாகி விடுகின்றனர். இச்சம்பவங்கள் வேதனையை தருகின்றன.சில நாட்களுக்கு முன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், வீட்டுமனை இடத்தை மீட்டுத் தரக்கோரி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டனர்.
இறப்பு சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பதாக கூறி, பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.'என் இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்; அதை மீட்டுத் தாருங்கள்' என, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.இப்படி அனைத்து மாவட்டங்களிலும் தீக்குளிப்பு முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன...ஆரம்ப காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவங்கள், இன்று சாதாரண செய்தி என்ற அளவிற்கு மாறிப் போனது தான் உச்சக்கட்ட கொடுமை!குறை தீர்க்கும் நாளின் போது யாரும் எரிபொருளுடன் வருகின்றனரா என காவல் துறையினர் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலைமையாகி விட்டது.
மக்களின் குறைகளை தீர்க்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தீக்குளிப்பு விஷயத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-செப்-202115:31:47 IST Report Abuse
D.Ambujavalli புருஷன் பெண்டாட்டி சண்டை முதல் பொது வெளியில் அதிகாரியின் முன்பே முயலும் வரை இந்தத் 'தீக்குளிப்பு' நாடகம் விரிவடைந்துள்ளதால், காவல்துறையின் கண்காணிப்பை இருக்கமாக்க வேண்டும்
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
07-செப்-202114:07:48 IST Report Abuse
mathimandhiri இனி அடுத்தடுத்த வெள்ளை அறிக்கைகளை மாதத்தில் நான்கோ ,ஐந்தோ ஒன்றொன்றாக எதிர் பார்க்கலாம்///தமிழக மாக்களே உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்/// தேற்றிக் கொள்ளுங்கள் ஆமாம்//
Rate this:
Cancel
திருட்டு திராவிடன் மிக மிக அருமை திரு. கணேஷ் அவர்களே. சுதந்திரம் கிடைக்க சிறை தண்டனை அனுபவித்த நம் சொரியார் வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X