சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

நகை கடன் மோசடியில் சிக்கும் அ.தி.மு.க., பிரமுகர்!

Added : செப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நகை கடன் மோசடியில் சிக்கும் அ.தி.மு.க., பிரமுகர்!நாயர் கடை ரேடியோவில், 'கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே...' பாடல் ஒலித்தது. ''தங்கப்பதுமை பட பாடல் தானே இது... கேட்டு ரொம்ப நாளாச்சு ஓய்...'' என்றபடியே முதல் தகவலுக்கு வந்தார் குப்பண்ணா...''பதிவுத்துறையில மாவட்ட பதிவாளர் அலுவலகம், டி.ஐ.ஜி., அலுவலகங்களில் துாய்மை பணிகள் ஒப்பந்தம் விடுவா... அந்த ஒப்பந்தத்தை

 டீ கடை பெஞ்ச்


நகை கடன் மோசடியில் சிக்கும் அ.தி.மு.க., பிரமுகர்!


நாயர் கடை ரேடியோவில், 'கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே...' பாடல் ஒலித்தது. ''தங்கப்பதுமை பட பாடல் தானே இது... கேட்டு ரொம்ப நாளாச்சு ஓய்...'' என்றபடியே முதல் தகவலுக்கு
வந்தார் குப்பண்ணா...

''பதிவுத்துறையில மாவட்ட பதிவாளர் அலுவலகம், டி.ஐ.ஜி., அலுவலகங்களில் துாய்மை பணிகள் ஒப்பந்தம் விடுவா... அந்த ஒப்பந்தத்தை எடுத்தவா, வேலைக்கு
ஆட்களை அனுப்புவா ஓய்...

''ஒப்பந்ததாரர் வழியாக தான் அந்த பணியாளர்களுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் சம்பளம் தருவா ஓய்...

''சென்னை ராயப்பேட்டையில இருக்கற பதிவுத்துறை பயிற்சி மையத்துல இருந்து சில மாதங்களாக துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வரலையாம்... கெஞ்சி கேட்ட பின், சம்பளத்துக்கான காசோலையை
கொடுத்திருக்கா ஓய்...

''காசோலை கொடுத்த அதிகாரி, ஒப்பந்ததாரரிடம், 'அதை பாஸ் செய்ய கூடாது'ன்னு நிறுத்த சொல்லிட்டாராம்... சம்பளம் கொடுக்காம இருக்கறதுக்கு காரணம் என்னன்னு தெரியாம துாய்மை பணியாளர்கள் புலம்பறா ஓய்...''என முடித்தார், குப்பண்ணா.''அடுத்ததாக அ.தி.மு.க., பிரமுகர் ஒருத்தர் சிக்க போறாருங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்,
அந்தோணிசாமி.

''யாரு, என்ன விஷயத்துக்காக சிக்க போறாரு பா...'' என கேட்டார் அன்வர்பாய்.

''கொரோனா காலத்துல விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு வங்கிகள் வழியாக குறைந்த வட்டியில நகை கடன் வழங்குற திட்டத்தை, மாநில அரசு ஆரம்பிச்சதுங்க...

''இதுல நீலகிரியில் இருக்கற 77 வங்கிகளுக்கு, 80 கோடி ரூபாய் ஒதுக்கினாங்க... அதுல அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மாஜி., மாவட்ட செயலாளர் புத்திசாலித்தனத்தில் சந்திரனாக இருக்குறவர், தன் ஆதரவாளர்கள் பெயருல பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்காருங்க...

''இது இப்போ நடந்துக்கிட்டு இருக்குற, அரசின் 100 சதவீத சிறப்பு ஆய்வுல தெரிய வந்துருக்குங்க... அந்த அ.தி.மு.க., பிரமுகரும், மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி செயலர்களும் பீதியில இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''ஆட்சி மாறிடுச்சுல்ல... இனி ஆளே மாறிடுவாவ வே...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''விஷயத்தை சொல்லுங்க பா...'' என கேட்டார் அன்வர்பாய்.''ஜெயலலிதா பல்கலை விவகாரம் தொடர்பா சில நாளைக்கு முன் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சாலை மறியலில் ஈடுபட்டாவ... போலீசார், அவங்களை கைது செஞ்சு சென்னை திருவல்லிக்கேணியில இருக்கற சமூக நலக்கூடத்துல வச்சிருந்தாவ வே...

''விஷயம் தெரிஞ்சதும் அந்த இடத்துக்கு அ.தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிஞ்சாவ வே...

''சில தொண்டர்கள், தங்களோட மாவட்ட, பகுதி செயலர்களிடம், 'நம்ம எம்.எல்.ஏ.,க்கள் கைதை கண்டித்து நாமும் போராட்டம் நடத்தலாம் வாங்க'ன்னு கூப்பிட்டாவ வே...

''அதுக்கு அவங்க, 'அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை... கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்கு கிளம்பலாம்'ன்னு சொல்லியிருக்காவ வே...

''ஆட்சியில இருக்குறப்போ இவங்க எல்லாம் எப்படி நடிச்சாவ தெரியுமான்னு தொண்டர்கள் புலம்பிக்கிட்டே இடத்தை விட்டு கிளம்பிட்டாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

நாயர் கடை ரேடியோவில், 'ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே, ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே...' பாடல் ஒலிக்க, நண்பர்கள் சிரித்தபடியே நடையை கட்டினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-செப்-202115:25:47 IST Report Abuse
D.Ambujavalli தாங்கள் செல்லாக்காசாகி விட்டோம், மாட்டிக்கொண்டு கேஸ் கோர்ட் என்று போனாலும் பெருந்தலைகள் காப்பாற்றாது என்று நிதர்சனம் புரிந்தவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X