சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

நில அளவை பொறுத்தே சலுகை!

Added : செப் 06, 2021
Share
Advertisement
பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் அரசு மானியம் பெறுவது தொடர்பாக கூறும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்மை உதவி இயக்குனர் பொ.வேல்முருகன்: நிலத்தின் உரிமையாளர் யார் என்பதைக் காட்டுவது, பட்டா.இதில் மாவட்டம், ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விபரங்களுடன், 'சர்வே' எண்ணும், உட்பிரிவும் குறிப்பிடப்பட்டு இருக்கும். நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா, நிலத்தின்
சொல்கிறார்கள்

பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் அரசு மானியம் பெறுவது தொடர்பாக கூறும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்மை உதவி இயக்குனர் பொ.வேல்முருகன்: நிலத்தின் உரிமையாளர் யார் என்பதைக் காட்டுவது, பட்டா.இதில் மாவட்டம், ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விபரங்களுடன், 'சர்வே' எண்ணும், உட்பிரிவும் குறிப்பிடப்பட்டு இருக்கும். நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா, நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விபரங்களும் இருக்கும்.அதாவது, ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழ் தான் பட்டா.சிட்டா என்பது, ஒருவருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதை குறிக்கும் அரசாங்கப் பதிவேடு.இதில், சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம், நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா, நிலத்துக்கான தீர்வை கட்டிய விபரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விபரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணமே சிட்டா.அடங்கல் என்பது, ஊரில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு.

இதில், குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண், நிலத்தின் பயன்பாடு, நிலம் எந்தப் பகுதியில் உள்ளது போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகள்என பிரிவுகள் உள்ளன. சிறு, குறு விவசாயி பிரிவில் மானியம் பெற வேண்டும் எனில், 5 ஏக்கர் அளவுக்குள் நிலம் இருக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதத்திலும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு, 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. நிலத்தின் அளவுகளை வைத்து தான் அரசு மானியங்களும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன.தொடர்புக்கு: 99524 17105

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X