இடைத்தேர்தலில் மம்தாவுக்கு எதிராக வேட்பாளர் இல்லை

Updated : செப் 07, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கட்டமைக்கும் விதமாக, பவானிபுர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதை தவிர்ப்பது என காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் பெற்ற அபார வெற்றியை அடுத்து, மூன்றாவது முறையாக முதல்வராக
மம்தா, வேட்பாளர் இல்லை அடடே!பவானிபுர் இடைத்தேர்தல்

பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கட்டமைக்கும் விதமாக, பவானிபுர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதை தவிர்ப்பது என காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் பெற்ற அபார வெற்றியை அடுத்து, மூன்றாவது முறையாக முதல்வராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றார்.ஆனாலும் அவர், தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோற்றார். இதனால், அடுத்த ஆறு மாதத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆக வேண்டிய கட்டாயம் மம்தாவுக்கு ஏற்பட்டது.


30ல் இடைத்தேர்தல்



இதனால், அவரது அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற சோபன்தேவ் சட்டோபாத்யா தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, மம்தா போட்டியிடுவதற்கு வழி ஏற்படுத்தி தந்தார்.பவானிபுர் எனப்படும் அந்த தொகுதி தான் மம்தா பானர்ஜியின் பாரம்பரிய தொகுதி. அங்கிருந்து தான் எப்போதுமே அவர் போட்டியிட்டு வெற்றி பெறுவது வழக்கம். கடந்த தேர்தலில் நந்திகிராமுக்கு மாறியிருந்தார்.
இந்நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. வரும் 30ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, மேற்கு வங்க அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பவானிபுரில் திரிணமுல் வேட்பாளராக மம்தா பானர்ஜி களம் இறங்கவுள்ளார்.முதல்வர் பதவியில் எந்த பிரச்னையும் இல்லாமல் நீடிக்க வேண்டுமென்பதால், மம்தாவுக்கு இந்த தேர்தல் வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒருவேளை மம்தாவை பா.ஜ., வீழ்த்திவிட்டால், அவரது இமேஜ் பாதிக்கப்பட்டு தேசிய அளவிலான வியூகத்திலும் ஓட்டை விழலாம் என்பதால், இந்த தேர்தலை திரிணமுல் காங்கிரஸ் மிகுந்த ஜாக்கிரதையாக அணுகவுள்ளது.இந்நிலையில் திடீர் திருப்பமாக, மம்தா போட்டியிடும் பவானிபுர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என காங்., முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற நிலையில் காங்கிரசின் இந்த வியூகம், தேசிய அரசியலை கவனத்தில் வைத்து எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


ஆளுமை அவசியம்



இது குறித்து டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: வரும் 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.,வை வீழ்த்தியே ஆக வேண்டுமென, முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வருகின்றன.டில்லியில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் இல்லங்களில் அடிக்கடி நடத்தப்படும் விருந்துகளில் இதற்கான ஆலோசனைகளும், வியூகங்களும் மாறி மாறி வகுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் காங்கிரசின் இந்த முடிவு என கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்துவதற்கு, மம்தாவின் ஆளுமைமிகவும் அவசியம் என காங்கிரஸ் நம்புகிறது. கடந்த மாதம் காங்., தலைவர் சோனியாவை டில்லியில் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்தபோதே, எல்லா திட்டங்களும் தெளிவுபடுத்தப்பட்டு அதற்கேற்ப காய்கள் நகர்த்தப்படுகின்றன.

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், லோக்சபா காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும், திரிணமுல் காங்கிரசுக்கும் எப்போதுமே ஆகாது.சமீபத்தில் முர்ஷிதாபாத் என்ற இடத்தில் ஆளும் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டு, காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியதாக குற்றஞ்சாட்டி, முதல்வர் மம்தாவுக்கு கடிதம் எழுதி கடுமையாக சாடியிருந்தார்.
ஆனாலும் மாநில நிலைமைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, இடைத்தேர்தலில் இத்தகைய முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் காட்ட வேண்டுமென, காங்கிரஸ் வகுத்துள்ள திட்டமே இதற்கு காரணம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-செப்-202121:34:32 IST Report Abuse
Pugazh V //வேட்பாளராக நிற்க கட்சியில் பலியாடு🤮 கிடைக்காததால் போட்டியிடவில்லை // மிகவும் சரி. மம்தா பானர்ஜி யின் வெற்றி உறுதி என்று தெரிந்ததால் யாரையும் நிற்க வைத்து பலிகடா ஆக்கவில்லை தான்.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
07-செப்-202121:09:12 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் பிஜேபி கூடவா இவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை ? ஏதாவது உள்குத்து ?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
07-செப்-202116:52:54 IST Report Abuse
DVRR காங்கிரசுக்கு சவால் எங்கே நின்னு வெறும் 1000 வோட்டுக்கு மேலே வாங்கி காண்பியுங்கள் நீங்கள் ஒரு கட்சி என்று நம்பலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X