'நிபா' வைரஸ் எங்கிருந்து பரவியது? தீவிர கண்காணிப்பில் கேரளா அரசு!

Updated : செப் 08, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோழிக்கோடு: “நிபா வைரஸ் எப்படி பரவியது என்பதை கண்டறியும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்,” என, கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பழம் திண்ணி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நிபா வைரஸ்,
நிபா, வைரஸ் ,பரவியது?,ர கண்காணிப்பு, கேரளா அரசு!

கோழிக்கோடு: “நிபா வைரஸ் எப்படி பரவியது என்பதை கண்டறியும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்,” என, கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பழம் திண்ணி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நிபா வைரஸ், மக்கள்மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில், 12 வயது சிறுவன் நிபா வைரசால் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேரில், ஏழு பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளன.

அதன் முடிவுகள் வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படும்.நிபா வைரசால் பாதிக்கப்பட்டோரை கண்டறியும் பணிகளை துரிதப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்; அதை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன.அதேபோல் இந்த வைரஸ் பரவத் துவங்கிய இடத்தை கண்டறிய வேண்டியதும் முக்கியம். உயிரிழந்த சிறுவன் தான், நிபா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நபரா என்பதையும், அந்த சிறுவன் பாதிக்கப்பட்டது எப்படி என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.அதை கண்டறியும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
07-செப்-202121:13:09 IST Report Abuse
Nagercoil Suresh வைரஸுக்கு கூட இவர்களை பிடிக்கவில்லை...
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
07-செப்-202106:49:32 IST Report Abuse
Ravichandran Narayanaswamy கேரளா ஒரு மினி காஷ்மீர் மாதிரி, கள்ளக்கடத்தல்காரர்கள் இந்துவிரோதிகள் அரிசி-மணல்-தமிழ்நாட்டிலிருந்து கடத்துபவர்கள் இருக்கும் மாநிலம் கேரளம். இங்கு அயல்நாட்டில் பணிபுரியும் ஆட்களின் நடமாட்டம் அதிகம். தமிழர்களே உஷாராய் இருங்கள் வியாதிகளை இறக்குமதி செய்துவிடாதீர்கள்.
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
07-செப்-202106:48:05 IST Report Abuse
Ravichandran Narayanaswamy Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X