உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பதில்லை: ரமணா கோபம்

Updated : செப் 08, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (13+ 56)
Share
Advertisement
புதுடில்லி:''பல்வேறு தீர்ப்பாயங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை நிரப்பாமல் அவற்றை பயனற்றதாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதில்லை,'' என, தலைமை நீதிபதி என்.வி. ரமணா கோபத்துடன் தெரிவித்துள்ளார்.தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உட்பட பல்வேறு தீர்ப்பாயங்களில் தலைவர் பதவி காலியாக உள்ளது. மேலும்
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், மத்திய அரசு ,தலைமை நீதிபதி கோபம்

புதுடில்லி:''பல்வேறு தீர்ப்பாயங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை நிரப்பாமல் அவற்றை பயனற்றதாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதில்லை,'' என, தலைமை நீதிபதி என்.வி. ரமணா கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உட்பட பல்வேறு தீர்ப்பாயங்களில் தலைவர் பதவி காலியாக உள்ளது. மேலும் தீர்ப்பாயங்களில் தொழில்நுட்ப மற்றும் சட்ட நிபுணர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். இவ்வாறு, 250க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்' என, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் தீர்ப்பாய சீர்திருத்த சட்டம் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இந்த சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் வழக்கு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:
உரிய நியமனங்களை செய்யாமல் தீர்ப்பாயங்களை பயனற்றதாக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து வரும், 13ம் தேதிக்குகள் பதிலளிக்க வேண்டும். அதற்குள் நியமனங்களுக்கு உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கிறோம்.மத்திய அரசுடன் எந்த மோதல் போக்கையும் நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மத்திய அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்துக்கு தடை விதிப்பது, தீர்ப்பாயங்களை மூடுவது, தீர்ப்பாயங்களுக்கு நாங்களே நியமனங்களை செய்வது, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பை வழக்கைத் தொடர்வது என, எங்களுக்கு முன் சில வாய்ப்புகள் உள்ளன.

உரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாமல் பல தீர்ப்பாயங்கள் செயல்பட முடியாமல் உள்ளன. நாங்கள் எந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என்பதை நீங்களே கூறுங்கள்.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து சற்று அவகாசம் அளிக்கும்படி சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா கேட்டார். அதன்படி, 13ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13+ 56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
07-செப்-202121:25:45 IST Report Abuse
spr கருத்து சுதந்திரம், உண்மையான மனித நேயம், மதச்சார்பின்மை போன்ற எதையும் சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் இருக்கும் மக்களைக் கொண்ட இந்த நாட்டில் எதிர்க்கட்சிகளாலும் இந்தியாவின் முன்னேற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சில வெளிநாடுகளின் பணத்தால் பிழைப்பு நடத்தும் சில பத்திரிகைகள் ஊடகங்கள் இவற்றால் அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் குறை கூறுகின்ற இந்த கால கட்டத்தில் நாட்டை ஆளுகின்ற திறனுள்ள தலைவர் மோடி மட்டுமே அவர் பாரதியைப் போல. தனக்கு கிடைத்த வாய்ப்பில் குறுகிய காலத்தில் இத்தனை நாட்கள் காங்கிரஸ் செய்யாத பல திட்டங்களை அதிரடியாக நடத்த முயல்வதுதான் அதனால் சில நேரங்களில் மக்கள் வருத்தமடைய நேருகிறது கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை இதுவரையில் அனுபவித்த னகம்மாளும் முழுமையாக அவரை அவரது செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனினும் எதிர்காலத்தில் நம் இளைய தலைமுறை அனுபவிக்கப் போகும் நல்ல வாழ்க்கைக்காக, இந்தியா ஒரு வல்லரசாக உருவாகும் என்ற நெடுநாளைய பலனை நினைத்து நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது திரு கலாமும் சொன்ன கருத்தே நாடு வல்லரசாக வேண்டுமெனில் உள்நாட்டில் எதிர்கட்சிகளோடு பன்னாட்டு எதிர்ப்பையம் சமாளிக்க வேண்டியுள்ளது நாட்டில் பல முக்கிய பிரச்சினைகள் முன் நிற்கையில் அரசின் எந்த் ஒரு துறையும் அனுபவிக்காத ‘வருடந்திர விடுமுறை’ மற்றும் பெருத்த வருமானம் இதர சலுகைகள் செல்வாக்கு குற்றம் சாட்டப்படாமல் பாதுகாக்கப்படும் தங்களது சொகுசு வாழ்க்கையைக் கூட வீட்டுக் கொடுக்க விரும்பாத இவர் குறிப்பிடும் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயப் பணியிட நியமனம் ஒரு பெரிய விஷயமல்ல. ஆனால் பிப்ரவரி 2016ல் ஏறக்குறைய 48,418 சிவில் வழக்குகளும், டிசம்பர் 2014ல் 3116 மிலியன் சிவில் வழக்குகள் உயர்நீதி மன்றங்களிலும், 8234 மில்லியன் வழக்குகள் மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் தேங்கியிருப்பதாக ஒரு பன்னாட்டு நாளிதழ் குறிப்பிடுகிறது ,அந்த வழக்குகளைக் காலத்தில் விசார்த்துதீர்ப்புக் கூற இயலாத இவர்களின் கையறு நிலையைச் சரி செய்ய மத்திய அரசு 2016 ல் எடுத்த அதிரடி நடவடிக்கை என்பதுவும் அதனால் இவர்களின் செல்வாக்கு குறைந்து போகிறது என்பதுவும் இவரை வருத்துகிறது போலும் எனவே மத்திய அரசைக் குறை கூறுகிறார். இவர்களுக்கு இணையாக சொல்லப்போனால் இவர்களுக்கில்லாத பல அதிகாரம், அத்துறை அறிவு சார்ந்த பணியாளர்கள் மற்றும் வசதி அத்தீர்ப்பாயத்திற்கு உண்டு தொழில் மற்றும் நிதிசார் மறுகட்டமைப்புக்கான மேல்முறையீட்டு ஆணையம் (AAIFR), நிறுவனச் சட்ட வாரியம், தொழில் மற்றும் நிதிசார் மறுகட்டமைப்புக்கான வாரியம் (BIFR) ஆகியவற்றின் சட்ட அதிகாரங்களையும், உயர்நீதி மன்றங்களிடம் உள்ள நிறுவனம் மூடல் மற்றும் பிற அதிகாரங்களையும் ஒருங்கே பெற்ற அமைப்பாக தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் விளங்குகிறது.அதற்கேற்ற நபரைத் தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனம் தேவை என்பது இவர் அறியாத ஒன்றல்ல. அவ்வமைப்பின் சில விதிகள் அரசியல் சட்டங்களுக்கு எதிரானது என்று கூறி அதனை முழுவதுமாக ஏற்காத நிலையில், அதனை குறையாவது சொல்வோம் என்ற எதிர்கட்சி மனப்பான்மையால் இவர் இப்படி குறை கூறுவதாகத் தோன்றுகிறது. இருப்பினும் அதனை மத்திய அரசுடன் நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் ஊடகங்களுக்குப் பேட்டிகொடுக்க வேண்டிய தேவையில்லை
Rate this:
Cancel
Balamurugan - Andipatty,இந்தியா
07-செப்-202112:37:21 IST Report Abuse
Balamurugan ஒவ்வொரு தீர்ப்பிலும் இத்தனை நாளுக்குள் இதனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடும் நீதிமன்றங்கள் நீதிமன்ற வழக்குகளை இத்தனை நாளுக்குள் முடிக்கவேண்டும் என்ற வரையறையின்றி இயங்குவது எந்த வகை நியாயம்?
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
07-செப்-202112:31:53 IST Report Abuse
Nellai tamilan முதலில் எந்த வழக்காக இருந்தாலும் அதை முடித்து நியாயமான ஒரு தீர்ப்பை சொல்வதற்கு ஒரு கால அளவை நிர்ணயம் செய்யுங்கள். ஜென்மம் முழுவதும் தீர்ப்பு வரமால் இருக்கும் வழக்குகள் தான் எல்லா குழப்பங்களுக்கும் காரணம். ஜாமீனுக்கும் கால அளவை நிர்ணயம் செய்யுங்கள். பிறகு கோபப்படுங்கள் நியாயமாக இருக்கும். பள்ளிகளுக்கு இணையாக கோடை விடுமுறைக்கு செல்லும் ஒரே துறை நீதி துறை மட்டுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X