அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருநெல்வேலி சாலைக்கு டி.வி.ஆர்., பெயர் : சட்டசபையில் வலியுறுத்தல்

Updated : செப் 08, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : ''திருநெல்வேலியில், 'தினமலர்' நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு, அதன் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவாக, 'டி.வி.ஆர்., சாலை' என பெயர் சூட்ட வேண்டும். அதற்கான அறிவிப்பை, முதல்வர் வெளியிட வேண்டும்,'' என்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வலியுறுத்தினார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:அரசின் திட்டங்களை, கொள்கைகளை, மக்கள் நலப் பணிகளை,
திருநெல்வேலி சாலை, டி.வி.ஆர்., பெயர் : சட்டசபை, அ.தி.மு.க., வலியுறுத்தல்

சென்னை : ''திருநெல்வேலியில், 'தினமலர்' நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு, அதன் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவாக, 'டி.வி.ஆர்., சாலை' என பெயர் சூட்ட வேண்டும். அதற்கான அறிவிப்பை, முதல்வர் வெளியிட வேண்டும்,'' என்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வலியுறுத்தினார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:அரசின் திட்டங்களை, கொள்கைகளை, மக்கள் நலப் பணிகளை, மக்களிடம் எடுத்து செல்லும் மகத்தான பணியை, செய்தித் துறை மேற்கொள்கிறது. இத்துறையை, ஜெயலலிதா அரசு நவீனப்படுத்தியது.


பாதுகாப்பு அரண்கடந்த 2011 முதல் 21 வரை, பத்திரிகையாளர்கள் ஓய்வூதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக, குடும்ப ஓய்வூதியத்தை 5,000 ரூபாயாக உயர்த்தினோம். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக ஜெயலலிதா அரசு திகழ்ந்தது.தலைமை செயலகத்தில் உள்ள செய்தி அறை நவீனமயமாக்கப்பட்டது. டில்லியில் உள்ள தமிழக பத்திரிகையாளர்களுக்கு, அங்கீகார அடையாள அட்டை வழங்கினோம்.

அத்துடன், அவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அறை ஒன்றை ஒதுக்கினோம். இந்த விபரம், கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி அடைந்துஇருப்போம்.பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கும் போது, நிதியத்துடன் அமைக்க, குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

அதுவும் கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெறவில்லை. பத்திரிகையாளர்கள் நல வாரியத்தை, விரைவில் அமைக்க வேண்டும்.ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்கள் பங்கு அதிகம். அவர்களை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக, 'தினத்தந்தி' நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனார், அவரது மகன் சிவந்தி ஆதித்தனார் ஆகியோர் பிறந்த நாளை, அரசு விழாவாக ஜெயலலிதா அறிவித்தார்.

அதேபோல, ராமச்சந்திர ஆதித்தனார் பெயரில் சிலை அமைத்தார். 'தினமலர்' நாளிதழுக்கு வயது 71 ஆகி உள்ளது. அவர்களும் ஒரு கோரிக்கை வைத்தனர். திருநெல்வேலியில், 'தினமலர்' நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள சாலை, 'திருவனந்தபுரம் ஹைரோடு' என்று அழைக்கப்படுகிறது. அந்த சாலையை, 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பெயரில், 'டி.வி.ஆர்., சாலை' என்று, பெயர் மாற்றம் செய்யும்படி கோரினர்.முன்னாள் முதல்வர் பழனிசாமி, திருநெல்வேலியில் ஆய்வுக்கு வந்த போது, கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார். அதை நிறைவேற்ற கோப்புகள் தயாரிக்கப்பட்டன. கொரோனா மற்றும் தேர்தல் வந்ததால், அது நிலுவையில் உள்ளது.மணிமண்டபம்தினமலரின் 71வது பிறந்த நாளையொட்டி, அந்த சாலை பெயர் மாற்ற அறிவிப்பை, முதல்வர் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபம் கட்டும் பணி, சிலர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக நிற்கிறது. வழக்கை அரசு விரைவாக முடித்து, பணியை நிறைவு செய்ய வேண்டும். மறைந்த விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு, கோவில்பட்டியில் சிலை அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu - tirunelveli,இந்தியா
12-செப்-202113:53:05 IST Report Abuse
muthu Congress Ramaswamy MLA palayamkottai constituency has given his own land for palayamkottai District head library. His name not yet come to that library. Will DMK govt look into this too
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
10-செப்-202106:10:36 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan செவிடன் காதில் ஊதும் சங்கு. நாமக்கல் மாவட்டம் துவக்கப்பட்டபோது "நாமக்கல் இராஜாஜி மாவட்டம்" என் பெயரிட முடிவு செய்தபோது அன்றைய முதல்வன் கருணாநிதி பிராமணன் பெயரில் மாவட்டமா என கொதித்து தடுத்து விட்டார். குறை சொல்லக்கூடாது என்பதால் தலைவர்கள் பெயரில் இருந்த மாவட்டஙகள் பெயரும் நீக்கப்பட்டன.
Rate this:
Cancel
07-செப்-202116:25:49 IST Report Abuse
ருத்ரா உலகில் சிலர் கண்களை பார்த்தால் பொய் சொல்ல முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X