பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை மட்டை  துாளாக்கும் இயந்திரத்தின் செயல் விளக்கம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
பெரியபட்டினம் : திருப்புல்லாணி வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் கிராமத்தில் தென்னை மட்டையை துாளாக்கும் இயந்திரம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் நடந்தது.தாகிரா என்பவரின் தென்னந்தோப்பில் ராமநாதபுரம் உழவர் பயிற்சி நிலைய துணைஇயக்குனர்கண்ணையா தலைமையில் நடந்தது. இளநிலை செயற்பொறியாளர் ராமர்

பெரியபட்டினம் : திருப்புல்லாணி வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் கிராமத்தில் தென்னை மட்டையை துாளாக்கும் இயந்திரம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் நடந்தது.

தாகிரா என்பவரின் தென்னந்தோப்பில் ராமநாதபுரம் உழவர் பயிற்சி நிலைய துணைஇயக்குனர்கண்ணையா தலைமையில் நடந்தது. இளநிலை செயற்பொறியாளர் ராமர் இயந்திரத்தின் பயன்கள்,செயல்படும் விதம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தார். ஒரு மணி நேரத்தில் 4000 கிலோ மட்டைகளை துாளாக்க முடியும்.ரூ.96 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை இதன் விலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அமர்லால், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் செழியன் உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் பானுமதி நன்றி கூறினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் மாரீஸ்வரன், உதவி வேளாண் அலுவலர் தவமுருகன் உட்படபலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X