சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆடுகளுடன் மாயமானவர் கைது

Added : செப் 06, 2021
Share
Advertisement
கமுதி: கமுதி அருகே ஒப்பந்த அடிப்படையில் ஆடு மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டவர் ஆடுகளை திருடி சென்றுள்ளார்போலீசார் விசாரித்து வருகின்றனர்.கமுதியைச் சேர்ந்த கருப்பையா 70,ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். மருதங்கநல்லுாரைச் சேர்ந்த கூரி 60,என்பவர் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பையாவிற்கு சொந்தமான ஆடுகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டு

கமுதி: கமுதி அருகே ஒப்பந்த அடிப்படையில் ஆடு மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டவர் ஆடுகளை திருடி சென்றுள்ளார்போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கமுதியைச் சேர்ந்த கருப்பையா 70,ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். மருதங்கநல்லுாரைச் சேர்ந்த கூரி 60,என்பவர் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பையாவிற்கு சொந்தமான ஆடுகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துஉள்ளார்.பசும்பொன் அருகே 58 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்ட கூரி வழக்கமான நேரத்திற்கு வீடு திரும்பவில்லை. ஆட்டின் உரிமையாளர் கருப்பையா , உறவினர்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை.

கமுதி போலீசில் கருப்பையா புகார் செய்தார். போலீசார் விசாரணையில்,ஆடு மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்ட கூரிஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது.விருதுநகர் மாவட்டம் நல்லுக்குறிச்சி காலனி அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 58 ஆடுகள்,கூரியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X