பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்

Added : செப் 06, 2021
Share
Advertisement
சுவேந்து ஆஜராக விலக்குகோல்கட்டா: மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுமான சுவேந்து அதிகாரியின் பாதுகாவலர் சமீபத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரிக்கும் மாநில சி.ஐ.டி., போலீசார், விசாரணைக்கு நேற்று ஆஜராகக்கோரி சுவேந்து அதிகாரிக்கு 'சம்மன்' அனுப்பினர். ஆனால் நேரில் ஆஜராகாத அவரிடம் இருந்து அதிகாரிகளுக்கு 'இ

சுவேந்து ஆஜராக விலக்கு

கோல்கட்டா: மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுமான சுவேந்து அதிகாரியின் பாதுகாவலர் சமீபத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரிக்கும் மாநில சி.ஐ.டி., போலீசார், விசாரணைக்கு நேற்று ஆஜராகக்கோரி சுவேந்து அதிகாரிக்கு 'சம்மன்' அனுப்பினர். ஆனால் நேரில் ஆஜராகாத அவரிடம் இருந்து அதிகாரிகளுக்கு 'இ மெயில்' வந்தது. அதில் 'அரசியல் பணிகள் காரணமாக ஆஜராக இயலவில்லை' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே விசாரணைக்கு போலீசாரிடம் ஆஜராவதில் இருந்து சுவேந்துவுக்கு விலக்கு அளித்து கோல்கட்டா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை

தானே: மஹாராஷ்டிராவில் தானே மாவட்டம் மஹரால் கிராமத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம்., மையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு மூன்று மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்களில் இருவர் கொரோனா கவச உடையும், மற்றொருவர் 'செக்யூரிட்டி' சீருடையும் அணிந்திருந்தனர். பின் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, 1 லட்சம் ரூபாய் திருடிய அவர்கள் கண்காணிப்பு கேமராக்களை எரித்துவிட்டு தப்பினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.

20 நாய்கள் கொலை

மஹோபா: உத்தர பிரதேசம் மஹோபாவின் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த இரு நாட்களில் மர்ம நபர்கள் 20 நாய்களுக்கு விஷம் கலந்த பிஸ்கட் கொடுதது கொலை செய்துள்ளனர். நாய்களை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.

கணிதவியலாளருக்கு விருது

ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த கணிதவியலாளர் ஆனந்த குமார், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கணிதத்தை எளிமையாக கற்றுத்தருகிறார். ஏழை மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் வெற்றி பெறுவதற்காக பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். இதனை பாராட்டி டில்லியில் உள்ள தேசிய ஆசிரியர் விஞ்ஞானி கவுன்சில் சார்பில் ஆனந்த குமாருக்கு நடப்பாண்டிற்கான சாராபாய் தேசிய விருது வழங்கப்பட்டது.

முன்னாள் கவர்னர் மீது வழக்கு

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் அஜீஸ் குரேஷி, 81. காங்., தலைவரான இவர், மிசோரம் மாநிலத்தின் முன்னாள் கவர்னர். இரு சமுதாயங்களுக்கு இடையே பதற்றம் உருவாக்கும் வகையில், மாநில அரசுக்கு எதிராக அவதுாறு அறிக்கைகள் வெளியிட்டதாக அஜீஸ் குரேஷி மீது போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X