துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி| Dinamalar

துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

Added : செப் 06, 2021
Share
போர்ட் லாடர்லேல்-அமெரிக்காவில் மனநலம் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. துப்பாக்கி கலாசாரத்திற்கு முடிவுகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அதில் பலன் அளிக்கவில்லை. புளோரிடா மாகாணத்தின் போர்ட் லாடர்டேல் பகுதியில் உள்ள இரண்டு

போர்ட் லாடர்லேல்-அமெரிக்காவில் மனநலம் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. துப்பாக்கி கலாசாரத்திற்கு முடிவுகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அதில் பலன் அளிக்கவில்லை. புளோரிடா மாகாணத்தின் போர்ட் லாடர்டேல் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் பிரையன் ரைலி, 33, என்ற மனநலம் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், நேற்று அதிகாலை நுழைந்தார்.

கையில் துப்பாக்கியுடன் சென்ற அவர், உள்ளே இருந்த, 11 வயதான சிறுமியை ஏழு முறை சுட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் அருகிலுள்ள வீடுகளுக்குள் நுழைந்த ரைலி, மூன்று மாத கைக்குழுந்தையுடன் இருந்த பெண்ணையும், குழந்தையின் பாட்டியையும் சுட்டுக்கொன்றார். இதையடுத்து, 62 வயதான முதியவர் ஒருவரும், அவரது கொலை வெறிக்கு பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய ரைலியை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X