பஞ்சஷீரை கைப்பற்றியதாக தலிபான் அறிவிப்பு

Added : செப் 06, 2021
Share
Advertisement
காபூல்-ஆப்கானிஸ்தானின் வடக்கே உள்ள பஞ்சஷீர் மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதி தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அமெரிக்க படைகளும் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஹிந்துகுஷ் மலையை ஒட்டிஉள்ள பஞ்சஷீர் மகாணம் தலிபான்களுக்கு எதிரான தேசிய கிளர்ச்சிப் படையின்

காபூல்-ஆப்கானிஸ்தானின் வடக்கே உள்ள பஞ்சஷீர் மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதி தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அமெரிக்க படைகளும் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஹிந்துகுஷ் மலையை ஒட்டிஉள்ள பஞ்சஷீர் மகாணம் தலிபான்களுக்கு எதிரான தேசிய கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.இந்தப் படையை அதன் முன்னாள் தலைவர் அஹமது ஷா மசூதின் மகன் அஹமது மசூத் தலைமைஏற்று நடத்தி வருகிறார்.

ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அமருல்லா சலேஹும் இந்தப் படைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.இந்த மாகாணத்தை கைப்பற்றியதாக தலிபான்கள் சமீபத்தில் தெரிவித்தனர். ஆனால் அதை தேசிய கிளர்ச்சி படை மறுத்தது. தீவிர சண்டைமேலும், சண்டையில் 800க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேசிய கிளர்ச்சிப் படை தெரிவித்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கு தீவிர சண்டை நடந்ததாகவும், அதன் முடிவில் மாகாணத்தை கைப்பற்றியதாகவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளதாவது:ஆயிரக்கணக்கான படை வீரர்கள் பஞ்சஷீர் மாகாணத்துக்குள் நுழைந்து எட்டு மாவட்டங்களை கைப்பற்றியுள்ளனர். தற்போது அந்த மாகாணமும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.இந்த மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் அச்சப்படத் தேவையில்லை. நாங்கள் முழு பாதுகாப்பை அளிப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தலிபான்கள் தாக்குதல்களை நிறுத்தினால், சண்டையை நிறுத்துவதாக அஹமது மசூத் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரும், சலேஹுவும் எங்கிருக்கின்றனர் என்ற தகவல் இல்லை.

அனுமதிக்கப்படவில்லை

இதற்கிடையே வடக்கு பால்க் மாகாணத்தின் மசார் - இ - ஷெரீப் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த நான்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமானம் மூலம் தப்பிக்க ஆப்கானிஸ்தானியர் முயன்றதாகவும், உரிய ஆவணங்கள் இல்லாததால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க எம்.பி.,யும், பார்லி.,யின் வெளியுறவு விவகாரக் குழுவைச் சேர்ந்தவருமான மைக்கேல் மெக்கால், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 'ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்காக விமானத்தில் அமெரிக்கர்கள் உள்ளிட்டோர் காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் வெளியேற தலிபான்கள் அனுமதி மறுக்கின்றனர்' என, குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றா என்பதையும் உறுதி செய்ய முடியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X