பொது செய்தி

இந்தியா

ஆட்டோ வாசகத்தால் பிரபலமான டிரைவர்

Updated : செப் 07, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கொச்சி ;கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர், தன் ஆட்டோவில் எழுதிய வாசகத்தால் ஒரே நாளில் 'டுவிட்டர்' வாயிலாக உலகம் முழுதும் பிரபலமாகியுள்ளார். தென் அமெரிக்காவைச் சேர்ந்த பிரேசில் நாட்டின் பிரபல நாவலாசிரியர் பாவ்லோ கொயலோ. இவர் 'தி லெவன் மினிட்ஸ், வெரோனிகா டிசைட்ஸ் டு டை, தி பில்கிரிமேஜ், அடல்டரி' உள்ளிட்ட புகழ் பெற்ற நாவல்களை எழுதியவர். இவரின் தீவிர வாசகரான கேரளாவின்
ஆட்டோ வாசகம்,  பிரபலமான டிரைவர்

கொச்சி ;கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர், தன் ஆட்டோவில் எழுதிய வாசகத்தால் ஒரே நாளில் 'டுவிட்டர்' வாயிலாக உலகம் முழுதும் பிரபலமாகியுள்ளார். தென் அமெரிக்காவைச் சேர்ந்த பிரேசில் நாட்டின் பிரபல நாவலாசிரியர் பாவ்லோ கொயலோ. இவர் 'தி லெவன் மினிட்ஸ், வெரோனிகா டிசைட்ஸ் டு டை, தி பில்கிரிமேஜ், அடல்டரி' உள்ளிட்ட புகழ் பெற்ற நாவல்களை எழுதியவர்.

இவரின் தீவிர வாசகரான கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த பிரதீப், தன் ஆட்டோவில் பாவ்லோ கொயலோ பெயரை ஆங்கிலத்திலும், அவரது புகழ் பெற்ற 'தி அல்கெமிஸ்ட்' நாவல் பெயரை மலையாளத்திலும் எழுதி வைத்துள்ளார். சமூக வலைதளத்தில் இந்த புகைப்படத்தை பார்த்த பாவ்லோவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உடனே அப்படத்தை 'டுவிட்டரில்' பதிவேற்றினார். டுவிட்டரில் பாவ்லோவை 1.50 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அவர்கள் பிரதீப் படத்தை பார்த்து பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.
இது குறித்து பிரதீப் கூறியதாவது:என் நண்பர் தான் 'டுவிட்டரில்' என்னைப் பற்றி வந்த செய்தியை காட்டினார். பாவ்லோவின் நாவல்கள், மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. அவை அனைத்தையும் படித்துள்ளேன். அதில் மிகவும் பிடித்த 'தி அல்கெமிஸ்ட்' நாவலை, என் ஆட்டோவில் எழுதி வைத்துஉள்ளேன். பாவ்லோ இந்தியா வந்தால் அவரை சந்திப்பேன். அவரது 'டுவிட்' எனக்கு கிடைத்த பரிசு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு, பாவ்லோவின் டுவிட்டை பாராட்டியுள்ளது.Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
07-செப்-202120:38:29 IST Report Abuse
அசோக்ராஜ் எல்லாம் ஒரு யாவார தந்திரம் தான். பௌலோ கொயிலோ புஸ்தகம் ஆயிரம் காப்பி வித்திருக்கும். ஏற்கெனவே பிஜு மேனோன் ஒரு படத்தில் இதற்கு விளம்பரம் செய்தார்.
Rate this:
Cancel
selva - Chennai,இந்தியா
07-செப்-202115:27:08 IST Report Abuse
selva உண்மை
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
07-செப்-202113:03:32 IST Report Abuse
pradeesh parthasarathy கேரளா மக்களிடம் வாசிக்கும் மோகம் அதிகம் ... சினிமா மோகம் தமிழர்களிடம் .... மத பித்து வடநாட்டவரிடம் ....
Rate this:
Bhaskar Srinivasan - Trichy,இந்தியா
07-செப்-202122:10:30 IST Report Abuse
Bhaskar Srinivasanசினிமா வை விட, மத சடங்குகளை பின்பற்றி ஆன்மீக தேடல் சிறந்ததே...
Rate this:
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
10-செப்-202113:57:46 IST Report Abuse
Natchimuthu Chithiraisamyகஜனி கோரி யிடம் அடி வாங்கியதால் என்னவோ ?...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
11-செப்-202104:46:26 IST Report Abuse
NicoleThomsonபட்டிகளின் வியாபார தந்திரம் இது என்பது எனது கருத்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X