சென்னை மற்றும் திருச்சியில் வக்பு வாரிய சொத்துக்கள் மீட்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை மற்றும் திருச்சியில் வக்பு வாரிய சொத்துக்கள் மீட்பு

Added : செப் 06, 2021
Share
கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா: தமிழ்நாடு வக்பு வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின், உரிமை ஆவண விபரங்களை, இணையதளத்தில் வெளியிட அரசு முன்வருமா? அமைச்சர் மஸ்தான்: வக்பு வாரிய சொத்துக்களின் விபரங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. அவை, வக்பு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.ஜவாஹிருல்லா: தமிழகத்தில், 7,500

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா: தமிழ்நாடு வக்பு வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின், உரிமை ஆவண விபரங்களை, இணையதளத்தில் வெளியிட அரசு முன்வருமா? அமைச்சர் மஸ்தான்: வக்பு வாரிய சொத்துக்களின் விபரங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. அவை, வக்பு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஜவாஹிருல்லா: தமிழகத்தில், 7,500 வக்புகள் உள்ளன. இவற்றுக்கு சொந்தமான சொத்துக்கள், எந்த இடத்தில் உள்ளன; வக்பு பெயர் என்ன; அதில் குத்தகைதாரர்களாக, வாடகைதாரர்களாக யார் உள்ளனர் என்ற விபரங்கள் இணையதளத்தில் இல்லை. அந்த இணையதளம் முற்றிலுமாக ஆங்கிலத்தில் உள்ளது. சொத்து விபரங்களை, தமிழில் வெளியிட வேண்டும்.வக்பு சொத்துக்களை வகை மாற்ற, வக்பு ஆய்வாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், தடையில்லா சான்றிதழ் வழங்க, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், முறைகேடு நடக்கிறது. எனவே, அவர்களுக்கு பதிலாக குழு அமைத்து வழங்க வேண்டும்.

அமைச்சர் மஸ்தான்: தமிழகத்தில், 7,250 சன்னி வக்பு நிறுவனங்களும், 202 ஷியா வக்பு வாரியச் சொத்துக்களும் உள்ளன. இவற்றில், 53 ஆயிரத்து, 420 சொத்துக்கள் உள்ளன. சொத்து விபரங்களை, தமிழில் வெளியிட ஆவண செய்யப்படும்.கடந்த ஆட்சி காலத்தில் தவறான தகவல்களை, அதிகாரிகள் கொடுத்த காரணத்தால் தவறு நடந்துள்ளது. இதற்கு நிர்வாக ரீதியாக, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில், சென்னை, நந்தனம் பகுதியில், ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,800 சதுர அடி வக்பு சொத்து, ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையில் மற்றொரு இடத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தும், திருச்சியில், 14 ஆயிரத்து, 750 சதுர அடி இடமும் மீட்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X