அரசியல் செய்தி

தமிழ்நாடு

முன்னுரிமை அடிப்படையில் துணை மின் நிலையம்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

Added : செப் 06, 2021
Share
Advertisement
சென்னை-''எங்கு அவசரமாக தேவையோ, அங்கு முன்னுரிமை அடிப்படையில், துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.மின்னழுத்த குறைபாடுசட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - அரவிந்த் ரமேஷ்: சோழிங்கநல்லுார் தொகுதி, 14வது மண்டலத்திற்கு உட்பட்ட, 168, 169 வார்டுகளில், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். உள்ளகரம்,

சென்னை-''எங்கு அவசரமாக தேவையோ, அங்கு முன்னுரிமை அடிப்படையில், துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மின்னழுத்த குறைபாடுசட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - அரவிந்த் ரமேஷ்: சோழிங்கநல்லுார் தொகுதி, 14வது மண்டலத்திற்கு உட்பட்ட, 168, 169 வார்டுகளில், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். உள்ளகரம், புழுதிவாக்கத்தில் மின்னழுத்த குறைபாடு ஏற்படுவதை தடுக்க, துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும். உள்ளகரம் பகுதியில் மின் கட்டணம் செலுத்த வசதி ஏற்படுத்த வேண்டும்.

நீலாங்கரை, ஓ.எம்.ஆர்., - மேடவாக்கம், பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை பகுதிகளில், துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி: முன்னுரிமை அடிப்படையில் அரசு பரிசீலிக்கும். 33 கி.வோ., துணை மின் நிலையம் அமைக்க, 1 ஏக்கர் நிலம் தேவை; 4.50 கோடி ரூபாய் செலவாகும்.இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மின் கட்டணம் செலுத்த, புதிய அலுவலகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்தெந்த இடங்களில் அவசரமோ, அந்த இடங்களில் முன்னுரிமை அடிப்படையில், துணை மின் நிலையம் அமைக்கப்படும். 176 கோட்டங்கள்சென்னை மாநகராட்சியில், தரைக்கடியில் கேபிள் பதிக்கும் பணி விடுபட்ட பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது. வரும் காலங்களில் அப்பணி மேற்கொள்ளப்படும்.பா.ம.க., - ஜி.கே.மணி: பென்னாகரம் பகுதியில், மின்வாரிய உப கோட்டத்தை, கோட்டமாக மாற்ற வேண்டும்.அமைச்சர் செந்தில் பாலாஜி: மின் வாரியம் சார்பில், 176 கோட்டங்கள் செயல்படுகின்றன. சில பகுதிகளில், இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கி, கோட்டம், மண்டலம், வட்டம் உள்ளது.

அந்தந்த மாவட்டங்களில், கோட்டம், வட்டம் அமைப்பது குறித்து, ஆய்வு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கவனத்திற்குஎடுத்து சென்று, பென்னகரம் தொகுதியில், முன்னுரிமை அடிப்படையில், பணிகள் மேற்கொள்ளப்படும்.தி.மு.க., - ராஜேந்திரன்: திருவள்ளூர் தொகுதியில், பாப்பரம்பாக்கம் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு, ஒரு துாண் அமைக்க வேண்டி உள்ளது. நிலத்தின் உரிமையாளர் நீதிமன்றம் சென்றதால் பணி நிலுவையில் உள்ளது. வழக்கை விரைவாக முடித்து, துணை மின் நிலையத்தை அமைக்க வேண்டும்.அமைச்சர் செந்தில் பாலாஜி: வழக்கை விரைவாக முடித்து, பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X