பொது செய்தி

தமிழ்நாடு

3,000 மரக்கன்றுகளுடன் வனப்பு: பசுமைக் குளம்! காலிங்கராயன் குளம் ஜொலிப்பு

Added : செப் 06, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:துார்ந்து போய் சிதிலமடைந்து கிடந்த காலிங்கராயன் குளம், தன்னார்வலர்களின் முயற்சியால், 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமைக் குளமாக காட்சியளிக்கிறது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில், காலிங்கராயன் குளம் என்று அழைக்கப்படும் சர்க்கார் சாமக்குளம் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம்,

கோவில்பாளையம்:துார்ந்து போய் சிதிலமடைந்து கிடந்த காலிங்கராயன் குளம், தன்னார்வலர்களின் முயற்சியால், 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமைக் குளமாக காட்சியளிக்கிறது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில், காலிங்கராயன் குளம் என்று அழைக்கப்படும் சர்க்கார் சாமக்குளம் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, கரைகள் ஒழுங்கற்று, மண் மேடுகள், புதர்கள், குப்பைகள் உடன், மழைநீர் வரும் பாதை சிதிலமடைந்து இருந்தது. இதனால், குளத்திற்கு நீர் வரத்து தடைபட்டு, வறண்டு காணப்பட்டது.தன்னார்வலர்கள்இதையடுத்து, 12 அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து, காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தினர். 2020 ஜனவரியில் குளத்தை துார்வார துவங்கினர்.குளத்தில் 3 கிலோ மீட்டர் துாரத்திற்கு கரைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன.

குளத்திற்கு மழைநீர் வரும் ஏழு நீர் வழிப்பாதைகளில், நான்கு பாதைகளில் முழுமையாக புதர்கள், மண் மேடுகள் அகற்றப்பட்டன. மதகுகள் சரி செய்யப்பட்டன. அடர்வனம் அமைக்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 250 மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. அதிகாலையில், 50 தன்னார்வலர்கள், 250 மரக்கன்றுகளை நட்டனர். பூவரசன், மந்தாரை, வேம்பு, மகிழம், மாதுளை, சீதா, கொய்யா, பலா ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், களை எடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், ஏற்கனவே உள்ள மரக்கன்றுகளை பராமரித்தல் ஆகியவை நடந்தன.

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:இதுவரை 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில், இந்த எண்ணிக்கையை, 4 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். தவிர, பறவைகளுக்கான தீவு, நடைபாதை உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.ரூ.5.35 கோடிதற்போது, இந்தக் குளத்தை துார்வாரி, சீரமைக்க, 5 கோடியே 35 லட்சம் ரூபாயில் ஒப்பந்தப்புள்ளி, அரசால் கோரப்பட்டுள்ளது.எனினும், நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் துவங்காமல் உள்ளன. விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து இந்தக் குளத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டால், சில மாதங்களில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் நீர் வரும்போது, குளத்தில் நீர் ததும்பும். எனவே விரைவில் பணிகளை துவக்க வேண்டும்.இவ்வாறு, தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X