அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., எதிர்ப்பு: சபையில் கூச்சல், குழப்பம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
கைத்தறி துறை அமைச்சர் காந்தி பதிலுரை வழங்கிய போது தெரிவித்த, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு, அ.தி.மு.க.,வினர் அவ்வப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டசபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.சட்டசபையில், கைத்தறி மற்றும் கதர்துறை மானிய கோரிக்கை விவாதம் நேற்று நடந்தது. விவாதத்திற்கு பின், துறை அமைச்சர் காந்தி பதிலுரை வழங்கினார். ஒருமையில் பேசக்கூடாதுஅப்போது, முந்தைய

கைத்தறி துறை அமைச்சர் காந்தி பதிலுரை வழங்கிய போது தெரிவித்த, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு, அ.தி.மு.க.,வினர் அவ்வப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டசபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.சட்டசபையில், கைத்தறி மற்றும் கதர்துறை மானிய கோரிக்கை விவாதம் நேற்று நடந்தது. விவாதத்திற்கு பின், துறை அமைச்சர் காந்தி பதிலுரை வழங்கினார். ஒருமையில் பேசக்கூடாதுஅப்போது, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் நடந்ததாக, பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். சில புள்ளி விபரங்களையும் கூறினார்.

இதற்கு, முன்னாள் அமைச்சர்கள்மணியன், முனுசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் இருக்கையில் இருந்து எழுந்து சென்று கோஷம் போட்டனர். அ.தி.மு.க., எதிர்ப்பால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நீடித்தது. இதனால், சபையில் பரபரப்பு நிலவியது.

அப்போது நடந்த விவாதம்:அமைச்சர் துரைமுருகன்: தேர்தல் முடிந்து ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது, ஆண்ட கட்சியின் செயல்கள், ஊழல்கள், செயலின்மை குறித்து, ஆளும் கட்சியினர் சொல்வது தவறில்லை. நீங்களும் இதை செய்தீர்கள்; நாங்களும் செய்தோம்.அ.தி.மு.க., - வேலுமணி: அமைச்சர்கள் பதிலுரையில் சாதனைகளை கூறுவர். குற்றச்சாட்டுக்களை கூறும் போது, எதிர்த்து பேச எங்களுக்கு வாய்ப்பில்லை. எங்கள் ஆட்சியில் நாங்கள் அப்படி பேசவில்லை. தொடர்ந்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை, அமைச்சர் பேசுகிறார்; அவற்றை நீக்க வேண்டும்.

துரைமுருகன்: உண்மைக்கு மாறான செய்திகளை கூறினால் நீக்கலாம்.அமைச்சர் காந்தி, அப்படிபேசியதாக தெரியவில்லை. 'நெசவாளிகள் கட்சி பாகுபாடு அற்றவர்கள்.அவர்களில் பேதம் பார்க்க கூடாது' என்று தான் அமைச்சர் கூறினார்.அ.தி.மு.க., - முனுசாமி: கடந்த கால ஆட்சி பற்றி ஆதாரம் இல்லாமல் குறைகளை கூறுகிறார்.

சபாநாயகர் அப்பாவு: தயவு செய்து அமருங்கள். ஒருமையில் யாரும் பேசக்கூடாது. அனைவரும் இருக்கைக்கு செல்லுங்கள். எல்லாரையும் உட்கார சொல்லி விட்டேன். தவறான வார்த்தையை யாரும் பயன்படுத்தவில்லை.இருக்கைக்கு சென்றால், பேசுவதற்கு அனுமதி தருகிறேன்.

அமைச்சர் துரைமுருகன்:எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமரும்படி கேட்டுக் கொள்கிறேன்.சபாநாயகர்: அமைச்சர்பேசி முடித்ததும், உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். 'எதிர்க்கட்சியினர், கூட்டணி கட்சியினர் மனம் புண்படும்படி பேசக்கூடாது' என, முதல்வர் கூறியுள்ளார். சபையில் இன்சொல் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்களை, மூன்று முறை கண்டித்து முதல்வர் அமர வைத்துள்ளார்.நல்ல கருத்துக்கள்முனுசாமி: தொடர்ந்து பல நாட்களாக, சபை அமைதியாக நடக்கிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் நல்ல கருத்துக்களை பறிமாறி வருகிறோம். மக்களுக்காக அமைதியான முறையில், ஆக்கபூர்வமாக முறையில் சபையை நடத்துகிறோம். அணைகட்டு எம்.எல்.ஏ., தரக்குறைவான கருத்துக்களை எடுத்து பேசுகிறார்.சபாநாயகர்: சபைக் குறிப்பில் இல்லாத வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.அதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. நானும் காது கொடுத்து கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.துரைமுருகன்: அமைச்சர்தவறான செய்தியை கூறினால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த, முன்னாள் அமைச்சருக்கு வாய்ப்புள்ளது. அந்த வாய்ப்பை நாளை அவர் பயன்படுத்தலாம்.சபாநாயகர்: இப்படிசத்தம் போட்டால் நியாயமா? ௧௦ ஆண்டுகளில் அமைச்சர்கள் பேசும்போது, எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை. இப்போது, சபையை ஜனநாயக முறைப்படி நடத்துகிறோம். அமைச்சர் பேசி முடித்ததும், வாய்ப்பு தருகிறேன்.துரைமுருகன்: 'ஆளும் கட்சியாக இருந்தபோது, நீங்கள் என்ன செய்தீர்கள்' என்று கேட்கும் உரிமை அமைச்சருக்கு உண்டு. அவரை பேசவே கூடாது என்று, கூறுவது ஜனநாயகம்அல்ல. இது, ரொம்ப அநியாயம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்; அவர் பேசி முடிந்தததும், உங்களுக்கு வாய்ப்பு தருவார்.இவ்வாறு, விவாதம் நடந்தது.அமைச்சர் பேசி முடித்ததும், முன்னாள் அமைச்சர் மணியன் பேச எழுந்தார். அப்போது, சபாநாயகர், ''நேரம் ஆகிவிட்டதால், நாளை வாய்ப்பு வழங்குகிறேன்,'' என்று கூறி, கூட்டத்தை நிறைவு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X