பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சியுடன் முத்தியால்பேட்டை இணைப்பதை தடுக்க கோரி மனு

Added : செப் 06, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : முத்தியால்பேட்டை ஊராட்சியை, காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு, அரசு விலக்கு அளிக்க வேண்டும் என, கிராம பெண்களுடன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சென்று, காஞ்சிபுரம் கலெக்டரிடம், நேற்று மனு அளித்தார்.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியிடம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி.ரஞ்சித்குமார் அளித்த மனு விபரம்:முத்தியால்பேட்டை ஊராட்சியில் இருக்கும்

வாலாஜாபாத் : முத்தியால்பேட்டை ஊராட்சியை, காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு, அரசு விலக்கு அளிக்க வேண்டும் என, கிராம பெண்களுடன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சென்று, காஞ்சிபுரம் கலெக்டரிடம், நேற்று மனு அளித்தார்.

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியிடம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி.ரஞ்சித்குமார் அளித்த மனு விபரம்:முத்தியால்பேட்டை ஊராட்சியில் இருக்கும் கிராமங்களை, காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதை அறிந்தோம். இந்த ஊராட்சியில் இருக்கும், 1,464 குடும்பங்களில், 1,040 குடும்பங்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளன.இதில், 2,200 பேர், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில், 100 நாள் வேலை செய்து வருகின்றனர். இத்திட்டத்தில் கிடைக்கும் வருவாயில் தான் பலர், குடும்பங்களை நடத்தி வருகின்றனர்.

முத்தியால்பேட்டை ஊராட்சியை, காஞ்சிபுரம் மாநகராட்சியில் இணைப்பதால், அனைத்து குடும்பங்களும் 100 நாள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும்.எனவே, முத்தியால்பேட்டை ஊராட்சியை, காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு விலக்கு அளித்து, தனி ஊராட்சியாக செயல்படுவதற்கு, அரசு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X