அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தினமும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டம்'

Added : செப் 06, 2021
Share
Advertisement
சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:அ.தி.மு.க., - விஜயபாஸ்கர்: கொரோனா தடுப்பூசி, மிகவும் அவசியமான நிலையில், 3.50 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளது. 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசி இரண்டு, 'டோஸ்' போட்ட பின், நோய் எதிர்ப்பு சக்தி, ஓராண்டு இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், மூன்றாவது டோஸ் போட, உலக சுகாதார நிறுவனத்திடம் அனுமதி

சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:அ.தி.மு.க., - விஜயபாஸ்கர்: கொரோனா தடுப்பூசி, மிகவும் அவசியமான நிலையில், 3.50 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளது.

'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசி இரண்டு, 'டோஸ்' போட்ட பின், நோய் எதிர்ப்பு சக்தி, ஓராண்டு இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், மூன்றாவது டோஸ் போட, உலக சுகாதார நிறுவனத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகஅரசு எடுத்து வரும் நடவடிக்கை என்ன, மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?அமைச்சர் சுப்பிரமணியன்: இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு, 'பூஸ்டர் டோஸ்' வழங்குவது குறித்து, மத்திய அரசு அமைத்துள்ள கொரோனா குழு, செயல்முறைகள் எதையும், மத்திய அரசுக்கு அளிக்கவில்லை. எனவே, மூன்றாவது டோஸ் குறித்த திட்டம், இந்திய அளவில் எங்கும்துவக்கப்படவில்லை. அது தான் தமிழகத்தின் நிலை.

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட்டாக வேண்டும் என்பதற்காக, முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இதன் காரணமாக, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள், கடந்த மாதத்தில் இருந்து தடையின்றி வருகின்றன.ஒரே நாளில் அதிகளவில், நேற்று முன்தினம், 19.22 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. கேரளாவில் தொற்று எண்ணிக்கை, ஒரு மாதமாக, 20 ஆயிரத்துக்கு குறையாமல் உள்ளது.

அவர்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், தொற்று குறையாததால், கேரளா எல்லையோர மாவட்டங்களில், அனைவருக்கும் தடுப்பூசி போட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.ஒரு நாளைக்கு 20 லட்சம் பேருக்கு என இலக்கு வைத்து, தடுப்பூசி போடும்படி அறிவுறுத்திஉள்ளார். நேற்று முன்தினம் ஒரே நாளில், 6.20 லட்சம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இது சாதனை தான் என்றாலும், இலக்கு 20 லட்சம்.வரும், 12ம் தேதி, கேரளா எல்லையோரம் உள்ள தமிழகத்தை சேர்ந்த, ஒன்பது மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும், கூடுதல் முகாம் என்ற வகையில், ஒரே நாளில், 10 ஆயிரம் முகாம்கள் அமைத்து, 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி, மக்கள் நல்வாழ்வுத் துறை பயணித்து வருகிறது.இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு, கொரோனா பாதிப்பு ஒன்றிரண்டு ஏற்பட்டாலும் இறப்பு இல்லை. மூன்று டோஸ் போடும் நிலை, உலகில் எங்கும் இல்லை. உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தால், தமிழகம் முதலில், அந்த பணியை துவங்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X