சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டிக்கு பிளாஸ்டிக் கொண்டு சென்றால் அபராதம்: கமிஷனர் எச்சரிக்கை

Updated : செப் 07, 2021 | Added : செப் 06, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை, நீலகிரி மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றால், அபராதம் விதிக்கப்படும்' என, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.மேட்டுப்பாளையம் நகராட்சி, போலீசார் இணைந்து, பவானி ஆற்றுப்பாலம் போலீஸ் சோதனைச் சாவடி முன்பு, புதிதாக வாகன சோதனை சாவடி
ஊட்டிக்கு பிளாஸ்டிக் கொண்டு சென்றால் அபராதம்: கமிஷனர் எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்:'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை, நீலகிரி மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றால், அபராதம் விதிக்கப்படும்' என, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.மேட்டுப்பாளையம் நகராட்சி, போலீசார் இணைந்து, பவானி ஆற்றுப்பாலம் போலீஸ் சோதனைச் சாவடி முன்பு, புதிதாக வாகன சோதனை சாவடி அமைத்துள்ளனர்.

இதில், நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் சோதனை செய்து வருகின்றனர்.இந்த சோதனைச் சாவடி மையம் திறப்பு நிகழ்ச்சிக்கு, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஜெய்சிங், தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் வினோத், திறந்து வைத்து பேசியதாவது:ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை, நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என, கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து அடுத்து போலீசாருடன், நகராட்சி ஊழியர்கள் இணைந்து வாகனங்களை சோதனை செய்கின்றனர். அப்போது தடைசெய்த, பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.எனவே, நீலகிரி மாவட்டத்திற்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், தடைசெய்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்லக் கூடாது.இவ்வாறு, அவர் பேசினார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X