பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவர்களுக்கு தடுப்பூசி சான்று அவசியம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே, கல்லுாரி வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளின் ஒருபகுதியாக, அரசு உத்தரவையடுத்து, நேற்று மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி திறக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கல்லுாரிக்கு வந்தனர்.கல்லுாரி நுழைவாயில் அருகே, மாணவர்களின் உடலின்
 கல்லுாரி மாணவர்களுக்கு தடுப்பூசி சான்று அவசியம்

மேட்டுப்பாளையம்:கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே, கல்லுாரி வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளின் ஒருபகுதியாக, அரசு உத்தரவையடுத்து, நேற்று மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி திறக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கல்லுாரிக்கு வந்தனர்.கல்லுாரி நுழைவாயில் அருகே, மாணவர்களின் உடலின் வெப்பநிலையை பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் உள்ள மாணவ, மாணவிகளை மட்டும் கல்லுாரி உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சான்றிதழ் இல்லாத மாணவர்கள், திருப்பி அனுப்பப்பட்டனர்.மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல் மற்றும் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிகளில், கல்லுாரி முதல்வர் சுகுமாரன், பேராசிரியர்கள் சிவஞானசித்தி, பாண்டியராஜன், தங்கராஜ், தையல்நாயகி, அபிராமி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X