ஊராட்சி நிர்வாகம் மீது முறைகேடு புகார்: உதவி இயக்குனர் நேரில் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி நிர்வாகம் மீது முறைகேடு புகார்: உதவி இயக்குனர் நேரில் விசாரணை

Added : செப் 06, 2021
Share
அன்னுார்:ஊராட்சியில் முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து உதவி இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.கஞ்சப்பள்ளி ஊராட்சித் தலைவராக அ.தி.மு.க., ஒன்றிய இணை செயலாளர் சித்ரா உள்ளார். துணைத் தலைவராக வசந்த் மற்றும் எட்டு வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.ஊராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக, துணைத் தலைவர் மற்றும் ஆறு வார்டு உறுப்பினர்கள், இரு வாரங்களுக்கு முன் கோவை
 ஊராட்சி நிர்வாகம் மீது முறைகேடு புகார்:  உதவி இயக்குனர் நேரில் விசாரணை

அன்னுார்:ஊராட்சியில் முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து உதவி இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.கஞ்சப்பள்ளி ஊராட்சித் தலைவராக அ.தி.மு.க., ஒன்றிய இணை செயலாளர் சித்ரா உள்ளார். துணைத் தலைவராக வசந்த் மற்றும் எட்டு வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.ஊராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக, துணைத் தலைவர் மற்றும் ஆறு வார்டு உறுப்பினர்கள், இரு வாரங்களுக்கு முன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.இது குறித்து விசாரிக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. நேற்று கோவை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் (தணிக்கை) மதுரா தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துராஜ், ரேணுகா ஆகியோர் அடங்கிய குழுவினர் கஞ்சப்பள்ளி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்; வார்டு உறுப்பினர்களிடம் புகார் குறித்து விசாரித்தனர்.விசாரணைவார்டு உறுப்பினர்கள், அதிகாரிகளிடம் கூறுகையில், 'ஊராட்சியில் மனை வரன்முறை செய்வதற்காக விண்ணப்பிப்போரிடம், அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் பணத்துக்கு ரசீது தருவதில்லை.ஊராட்சியில் வசூலிக்கப்படும் வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட தொகை உடனே அரசுக்கு செலுத்தப்படுவதில்லை. வாரக்கணக்கில் தாமதமாக செலுத்துகின்றனர்.பல தெரு விளக்குகள் எரிவதில்லை. சாக்கடை வடிகால் வசதி செய்யவில்லை. சாலை வசதி மோசமாக உள்ளது. குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஊராட்சித் தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுகிறார்' என்றனர்.ஊராட்சி தலைவர் சித்ரா கூறுகையில், "இது தவறான புகார். யாரிடமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன" என்றார்.ஆவணங்கள் இல்லைஇதையடுத்து, உதவி இயக்குனர் அனைத்து ஆவணங்களையும் தருமாறு தெரிவித்தார். சில ஆவணங்களை மட்டும் தந்த அலுவலர்கள், மற்ற ஆவணங்கள் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, உதவி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X