பொது செய்தி

தமிழ்நாடு

பட்டு விவசாயிகளுக்கு பரிசுகள்

Added : செப் 06, 2021
Share
Advertisement
பட்டு வளர்ச்சி மற்றும் கைவினை பொருட்கள் துறை அமைச்சர் அன்பரசன் அறிவிப்புகள்: பட்டு விவசாயிகள் 1,000 பேருக்கு நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள், 5.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும். பட்டு விவசாயி கள் 300 பேருக்கு, 3.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க உதவித்தொகை வழங்கப்படும் உயர் விளைச்சல் தரும மல்பெரி

பட்டு வளர்ச்சி மற்றும் கைவினை பொருட்கள் துறை அமைச்சர் அன்பரசன் அறிவிப்புகள்: பட்டு விவசாயிகள் 1,000 பேருக்கு நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள், 5.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

பட்டு விவசாயி கள் 300 பேருக்கு, 3.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க உதவித்தொகை வழங்கப்படும் உயர் விளைச்சல் தரும மல்பெரி ரகங்களை நடவு செய்யும் விவசாயி களுக்கு, 5.25 கோடி ரூபாய் செலவில் உதவித்தொகை வழங்கப்படும்  மாநில மற்றும் மாவட்ட அளவில், சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். மாநில அளவில் சிறந்த பட்டு நுாற்பாளர்களுக்கு, 1 லட்சம் ரூபாய், 75 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் என, பரிசுகள் வழங்கப்படும்

 நாச்சியார்கோவில், மதுரை, வாகைகுளம், சுவாமிமலை, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள பூம்புகார் உற்பத்தி நிலையங்கள், 3.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் சென்னை, கோவை, புதுடில்லி, கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையங்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ௫ கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப் படும் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நகர்ப்புற கண்காட்சி திடல் விரிவாக்கப் பணிகள், ௧ கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X