பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.32 லட்சம் கோடி திட்டம் வாரிய ஒப்பந்தம் கையெழுத்து

Added : செப் 06, 2021
Share
Advertisement
சென்னை-தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையே, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மின் வாரியம் அடுத்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம்; 3,000 மெகாவாட் நீர் மின்சாரம்; 2,000 மெகாவாட் எரிவாயு மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
 ரூ.1.32 லட்சம் கோடி திட்டம் வாரிய ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை-தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையே, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மின் வாரியம் அடுத்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம்; 3,000 மெகாவாட் நீர் மின்சாரம்; 2,000 மெகாவாட் எரிவாயு மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்த, 1.32 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவை. இது தொடர்பாக ஆலோசனைகள் வழங்க, இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்நிறுவனம், சந்தை ஆய்வு, திட்ட மேம்பாடு, ஒப்பந்தப் புள்ளிகள் மேலாண்மை, அமலாக்கம் போன்றவை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கும்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி, எரிசக்தித் துறை முதன்மை செயலர் தர்மேந்திரபிரதாப் யாதவ், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X