பொது செய்தி

தமிழ்நாடு

உத்தராஞ்சல் பல்கலை மாணவர்கள் காரமடையில் வேளாண் களப்பயிற்சி

Added : செப் 06, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:உத்தரகண்ட் மாநில வேளாண் கல்லுாரி மாணவர்கள், 7 பேர் காரமடையில் தங்கி, விவசாயம் சார்ந்த களப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள உத்தராஞ்சல் பல்கலையில் படிக்கும், வேளாண் கல்லுாரி மாணவ, மாணவிகள் 7 பேர், வேளாண் சார்ந்த கள ஆய்விற்கு காரமடை வந்துள்ளனர்.தேக்கம்பட்டி அருகே உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில், ஒரு மாதம் தங்கி,
 உத்தராஞ்சல் பல்கலை மாணவர்கள் காரமடையில் வேளாண் களப்பயிற்சி

மேட்டுப்பாளையம்:உத்தரகண்ட் மாநில வேளாண் கல்லுாரி மாணவர்கள், 7 பேர் காரமடையில் தங்கி, விவசாயம் சார்ந்த களப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள உத்தராஞ்சல் பல்கலையில் படிக்கும், வேளாண் கல்லுாரி மாணவ, மாணவிகள் 7 பேர், வேளாண் சார்ந்த கள ஆய்விற்கு காரமடை வந்துள்ளனர்.தேக்கம்பட்டி அருகே உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில், ஒரு மாதம் தங்கி, பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, விவசாயிகளிடம் நேரடியாக களப்பணியிலும், ஆய்விலும் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளியங்காடு அடுத்த முத்துக்கல்லுாரியில் உள்ள குறிஞ்சி உழவர் மன்ற நிர்வாகிகளிடம், கால்நடை வளர்ப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.மன்றத்தின் செயலாளர் தேவராஜ், கால்நடைகளை வளர்க்கும் முறை, கன்றுக்குட்டி பராமரிப்பு, தடுப்பூசி, சொட்டு நீர் பாசன முறை, வாழை, ஜாதிமல்லி பூ சாகுபடி முறைகள், மரபுசாரா எரிசக்தி திட்டத்தில், சோலார் மின்சாரம், அரசு வழங்கும் மானியங்கள் உள்ளிட்ட தகவல்களை, மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இம்மாணவர்கள், வெவ்வேறு கிராமங்களுக்குச் சென்று, களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X