பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு வழியா சர்வீஸ் ரோடு போடுறாங்க!

Added : செப் 06, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெ.நா.பாளையத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தையொட்டி, சர்வீஸ் ரோடு போடும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்டகால போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆண்டு நிதி திட்டத்தில், பெ.நா.பாளையம் வித்யாலயா மேட்டுப் பகுதியில் இருந்து, சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை, 88 கோடி ரூபாய் மதிப்பில், உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து
 ஒரு வழியா சர்வீஸ் ரோடு போடுறாங்க!

பெ.நா.பாளையம்:பெ.நா.பாளையத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தையொட்டி, சர்வீஸ் ரோடு போடும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்டகால போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆண்டு நிதி திட்டத்தில், பெ.நா.பாளையம் வித்யாலயா மேட்டுப் பகுதியில் இருந்து, சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை, 88 கோடி ரூபாய் மதிப்பில், உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பாலத்தை ஒட்டியுள்ள சாலைப்பகுதி மேடு, பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகள், பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.தற்போது, மழைக்காலம் என்பதால் ஏற்கெனவே குண்டும், குழியுமாக இருந்த சாலை, பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமடைந்தது.இப்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.தேசிய நெடுஞ்சாலைத் துறை, விரைவில் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என, உறுதி அளித்திருந்தது.இந்நிலையில், நேற்று எல்.எம்.டபிள்யூ., பிரிவு பகுதியிலிருந்து, சர்வீஸ் ரோடு போடும் பணி துவங்கியது. இயந்திரங்களைப் பயன்படுத்தி, சாலை சமன்படுத்தும் பணி நடந்தது. 'விரைவில் தார்சாலை அமைக்கப்படும்' என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X