மாவட்ட கவுன்சிலர் தேர்தல் களம் காண தி.மு.க., ரெடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கவுன்சிலர் தேர்தல் களம் காண தி.மு.க., ரெடி

Added : செப் 06, 2021
Share
அன்னுார்:மாவட்ட கவுன்சிலர் தேர்தல் குறித்து, தி.மு.க., ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட கவுன்சிலராக இருந்த அமுல் கந்தசாமி, வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். இதையடுத்து 3 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவி காலியாக உள்ளது.இதற்கு தேர்தல் நடத்த, வாக்காளர் பட்டியல் கடந்த 31ம் தேதி வெளியிடப்பட்டது. 59 ஆயிரத்து 400 வாக்காளர்கள் உள்ளனர்.தேர்தலுக்கான ஆரம்பகட்டப் பணிகள்

அன்னுார்:மாவட்ட கவுன்சிலர் தேர்தல் குறித்து, தி.மு.க., ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட கவுன்சிலராக இருந்த அமுல் கந்தசாமி, வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். இதையடுத்து 3 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவி காலியாக உள்ளது.இதற்கு தேர்தல் நடத்த, வாக்காளர் பட்டியல் கடந்த 31ம் தேதி வெளியிடப்பட்டது. 59 ஆயிரத்து 400 வாக்காளர்கள் உள்ளனர்.தேர்தலுக்கான ஆரம்பகட்டப் பணிகள் நடப்பதால், அன்னுாரில் தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் பேசுகையில், "கடந்த 4 மாதங்களில், தி.மு.க., பல சாதனைகளை செய்துள்ளது. பெண்களுக்கு அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம். 4 ஆயிரம் ரூபாய் வழங்கியது. இலவச ரேஷன் பொருள் தொகுப்பு என வழங்கியுள்ளது. கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், தி.மு.க., அரசின் நான்கு மாத சாதனைகளை பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பம்பரமாக செயல்பட்டு, 100 சதவீத வெற்றியை பெற்றுத் தர வேண்டும்" என்றார்.கூட்டத்தில், ஒன்றியச் செயலாளர்கள் ஆனந்தன், சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், நகரச் பொறுப்பாளர் பரமேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X