ரோடு சீரமைப்பு பணி தாமதம்:வாகன ஓட்டிகள் கடும் அவதி

Added : செப் 06, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில் இருந்து, முடீஸ் செல்லும் ரோடு சீரமைப்பு பணி தாமதமாக நடப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை அடுத்துள்ள முடீஸ், தோணிமுடி வழியாக சோலையாறுடேம் வரை செல்லும் ரோடு, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால், அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.இதனையடுத்து,
ரோடு சீரமைப்பு பணி தாமதம்:வாகன ஓட்டிகள் கடும் அவதி

வால்பாறை:வால்பாறையில் இருந்து, முடீஸ் செல்லும் ரோடு சீரமைப்பு பணி தாமதமாக நடப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை அடுத்துள்ள முடீஸ், தோணிமுடி வழியாக சோலையாறுடேம் வரை செல்லும் ரோடு, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால், அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.இதனையடுத்து, முடீஸ் ரோட்டை சீரமைக்க, வால்பாறை நகராட்சி சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரோடு சீரமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது.கடந்த எட்டு மாதங்களுக்கு முன், முடீஸ் ரோட்டை தோண்டி, ஜல்லிகளை மட்டும் பரப்பியுள்ளனர். இதனால், இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.ரோடு சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், வாகன ஓட்டிகளும், எஸ்டேட் தொழிலாளர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக சீரமைக்கபடாமல் இருந்த எஸ்டேட் ரோடு, நகராட்சி சார்பில் தற்போது சீரமைக்கும் பணி நடக்கிறது. ஆனால், பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இந்தப்பகுதியில், சீரமைக்கப்படாத ரோட்டினால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்லும் தொழிலாளர்களும், அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, ரோட்டை முழுமையாக சீரமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X