சோளப்பயிரை தாக்கும் கரிப்பூட்டை நோய்: மகசூல் பாதிப்பால் விவசாயிகள் வேதனை

Added : செப் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளப்பயிரில், கரிப்பூட்டை நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.பொள்ளாச்சியில், பாசன பற்றாக்குறை உள்ள பகுதிகளில், பருவமழையை அனுசரித்து, மானாவாரியாக சோளம் பயிரிடப்படுகிறது. சில ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்ததால், இந்தாண்டு சோளம் சாகுபடி பரப்பு
 சோளப்பயிரை தாக்கும் கரிப்பூட்டை நோய்: மகசூல் பாதிப்பால் விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளப்பயிரில், கரிப்பூட்டை நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.பொள்ளாச்சியில், பாசன பற்றாக்குறை உள்ள பகுதிகளில், பருவமழையை அனுசரித்து, மானாவாரியாக சோளம் பயிரிடப்படுகிறது. சில ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்ததால், இந்தாண்டு சோளம் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில், பருவமழைக்கு முன், கோடை மழையை பயன்படுத்தி, அதிகளவில் சோளம் பயிரிடப்பட்டது. ஜூன் முதல் வாரத்தில் துவங்கிய பருவமழை, அவ்வப்போது இடைவெளி விட்டாலும், தொடர்ந்து பெய்ததால், பயிர் நன்கு செழித்து வளர்ந்தது.ஆனால், பயிர் கதிர் விட்டு, அறுவடைக்கு தயாராகும் சூழலில், பருவ மழைக்காலம் தாண்டியும் மழை, வெயில் என மாறி மாறி குழப்பமான சீதோஷ்ணம் நிலவியது. இதனால், சோளத்தில் கரிப்பூட்டை நோய் பாதிப்பு ஏற்பட்டு, தானியங்கள் பயனற்று போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறுகையில், ''சோளத்தில், தலைக் கரிப்பூட்டை, தானிய கரிப்பூட்டை, நீளக்கரிப்பூட்டை, உதிரி கரிப்பூட்டை நோய்கள் தாக்குகின்றன. தற்போது, நீளக்கரிப்பூட்டை மற்றும் உதிரி கரிப்பூட்டை வகை நோய்கள் தாக்கியுள்ளன.கரிப்பூட்டை நோய் தாக்குவதை தவிர்க்க, விதைப்புக் காலத்திலேயே முன்னெச்சரிக்கையாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் 'திரம்' மருந்தை கலந்து நேர்த்தி செய்த பின் விதைத்தால், அனைத்து வகை கரிப்பூட்டை நோய்களையும் கட்டுப்படுத்தலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X