பொது செய்தி

தமிழ்நாடு

23 தபால் நிலையங்களில் ஆதார் திருத்தம் துவக்கம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தலைமை தபால்நிலையம் மற்றும், 22 துணை தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்த சேவை வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிக்கை:பொள்ளாச்சி தபால் கோட்டத்தில், மக்களின் வசதிக்காக, ஆதார் சேவை முகாம் மீண்டும் துவங்கியுள்ளது. பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகம் மற்றும் உடுமலை, ஆனைமலை, அங்கலக்குறிச்சி, குடிமங்கலம், கணியூர், கோவில்பாளையம்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தலைமை தபால்நிலையம் மற்றும், 22 துணை தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்த சேவை வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிக்கை:பொள்ளாச்சி தபால் கோட்டத்தில், மக்களின் வசதிக்காக, ஆதார் சேவை முகாம் மீண்டும் துவங்கியுள்ளது. பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகம் மற்றும் உடுமலை, ஆனைமலை, அங்கலக்குறிச்சி, குடிமங்கலம், கணியூர், கோவில்பாளையம், கிணத்துக்கடவு, கொமரலிங்கம், குறிச்சிக்கோட்டை துணை அஞ்கலகங்களில் ஆதார் சேவை முகாம் நடக்கிறது.மேலும், மகாலிங்கபுரம், மாக்கினாம்பட்டி, முடீஸ், மடத்துக்குளம், மலையாண்டிபட்டிணம், நெகமம், பெதப்பம்பட்டி, பூலாங்கிணர், வேட்டைக்காரன்புதுார், ஜமீன் ஊத்துக்குளி, வால்பாறை, காந்திநகர் மற்றும் வெங்கடேசாமில்ஸ் துணை தபால் நிலையங்களில் ஆதார் திருத்தம் செய்து தரப்படுகிறது.புதிய ஆதார் பதிவுக்கு கட்டணம் இல்லை. புகைப்பட மாற்றம், கைவிரல் ரேகை புதுப்பித்தல், கண் கருவிழி புதுப்பித்தல் சேவைகளுக்கு கட்டணமாக, 100 ரூபாய் செலுத்த வேண்டும்.பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றம், மொபைல் எண் பதிவு மற்றும் புதுப்பித்தல் மற்றும் இ-மெயில் பதிவு மாற்றம் போன்ற சேவைகளுக்கு, 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மேற்கொண்ட அலுவலகங்களில், உரிய ஆவணங்களுடன் சென்று, ஆதார் சேவையை பெற்று, பயனடையலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X