பொது செய்தி

தமிழ்நாடு

மேல்நீராறில் 7 செ.மீ., மழை: ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

Added : செப் 07, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேல்நீராறில், 7 செ.மீ., மழையளவு பதிவானது.வால்பாறையில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. காற்றுடன் கனமழை பெய்வதால், எஸ்டேட் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடமுடியாமல் தவித்தனர். சுற்றுலாபயணிகள் வெளியிடங்களுக்கு செல்ல
 மேல்நீராறில் 7 செ.மீ., மழை: ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

வால்பாறை:வால்பாறையில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேல்நீராறில், 7 செ.மீ., மழையளவு பதிவானது.வால்பாறையில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. காற்றுடன் கனமழை பெய்வதால், எஸ்டேட் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடமுடியாமல் தவித்தனர். சுற்றுலாபயணிகள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.29 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,714 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு, 1,660 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):வால்பாறை - 42, சோலையாறு - 37, மேல்நீராறு - 70, கீழ்நீராறு - 37, பரம்பிக்குளம் - 29, ஆழியாறு - 6, மேல்ஆழியாறு - 2, காடம்பாறை - 9, நவமலை - 3,பெருவாரிப்பள்ளம் - 17, வேட்டைக்காரன்புதுார் - 12, மணக்கடவு - 19, துாணக்கடவு - 25, சர்க்கார்பதி - 7, பொள்ளாச்சி - 17 என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X