சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலவச வீடு கேட்டு மனுக்களோடு திரண்ட மக்கள்: ஏமாற்று பேர்வழிகள் மீது நடவடிக்கை தேவை

Added : செப் 07, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், இலவச வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி, மனு கொடுக்க மக்கள் திரண்டனர்.பொள்ளாச்சி அருகே, பணிக்கம்பட்டியில் குடிசை மாற்று வாரியம் சார்பில், நான்கு ஏக்கர் பரப்பளவில், 512 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடக்கிறது.இந்நிலையில், இந்த குடியிருப்பில் குடியேற வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என, 300க்கும்
 இலவச வீடு கேட்டு மனுக்களோடு திரண்ட மக்கள்: ஏமாற்று பேர்வழிகள் மீது நடவடிக்கை தேவை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், இலவச வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி, மனு கொடுக்க மக்கள் திரண்டனர்.பொள்ளாச்சி அருகே, பணிக்கம்பட்டியில் குடிசை மாற்று வாரியம் சார்பில், நான்கு ஏக்கர் பரப்பளவில், 512 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடக்கிறது.இந்நிலையில், இந்த குடியிருப்பில் குடியேற வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என, 300க்கும் மேற்பட்ட மக்கள், தாலுகா அலுவலகத்துக்கு நேற்று, மனு கொடுக்க வந்தனர்.கூட்டமாக மக்கள் வந்ததால், வருவாய்துறை அதிகாரிகள், 'கொரோனா காலத்தில் கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும்; சமூக இடைவெளி பின்பற்றி நிற்க வேண்டும்,' என அறிவுறுத்தினர்.ஆனாலும், மக்கள் கலையாமல் கூட்டமாக நின்று, மனு கொடுத்ததற்கான ரசீது பெற்றுச் செல்ல ஆர்வம் காட்டினர்.அப்பாவி மக்கள்பொள்ளாச்சி, பணிக்கம்பட்டி குடியிருப்பில், இலவச வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும், என வலியுறுத்தி ஒரே மாதிரியான, ஜெராக்ஸ் படிவங்களை கொடுத்தனர்.ஒரு சிலர் ஆதாயம் பெறுவதற்காக, இலவச வீடு ஒதுக்கீடு பெற்றுக்கொடுப்பதாக கூறி, 100 முதல், 200 ரூபாய் வரை ஒவ்வொருவரிடமும் வசூலித்து, மனு கொடுக்க அழைத்து வந்தது தெரியவந்தது.பொதுமக்களும், அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி தாலுகா அலுவலகத்தில் திரண்டனர்.நடவடிக்கை தேவைபொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க, இதுபோன்று மக்களை அலைக்கழிப்பவர்கள் குறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் வசூல் செய்து, ஏமாற்றும் நபர்களை கண்டறியவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.அதிகாரிகள் கூறுகையில், 'குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து வசிப்போருக்கு முன்னுரிமை கொடுத்து, வீடுகள் ஒதுக்கீடு செய்து, ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.யாரோ தெரிவித்த தவறான தகவலை நம்பி, இலவச வீடு ஒதுக்கீடு கேட்டு மனு கொடுக்க வந்துள்ளனர். இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X