கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குழந்தை விற்பனை ஆசிரியைக்கு ஜாமின்

Added : செப் 07, 2021
Share
Advertisement
மதுரை-குழந்தை விற்பனை வழக்கில், ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.மதுரை இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில், அடைக்கலம் புகுந்த மேலுார் சேக்கிபட்டி ஐஸ்வர்யா என்ற பெண்ணின் 1 வயது குழந்தை, பெங்களூரு ஸ்ரீதேவியின் 2 வயது மகள் ஆகியோர், கொரோனாவால் இறந்து விட்டதாகக் கூறி, இரண்டு தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டனர். அறக்கட்டளை நிறுவனர் சிவகுமார், ஊழியர் மாதர்ஷா,

மதுரை-குழந்தை விற்பனை வழக்கில், ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

மதுரை இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில், அடைக்கலம் புகுந்த மேலுார் சேக்கிபட்டி ஐஸ்வர்யா என்ற பெண்ணின் 1 வயது குழந்தை, பெங்களூரு ஸ்ரீதேவியின் 2 வயது மகள் ஆகியோர், கொரோனாவால் இறந்து விட்டதாகக் கூறி, இரண்டு தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டனர். அறக்கட்டளை நிறுவனர் சிவகுமார், ஊழியர் மாதர்ஷா, குழந்தையை தத்தெடுத்த கண்ணன், சகுபர் சாதிக், அனிஷ் ராணி உட்பட சிலரை, தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

இல்லத்தில் ஆசிரியையாக பணிபுரிந்த கலைவாணி, 'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. கைதாகி 67 நாட்களுக்கு மேலாகிறது; ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி, ''ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை, தல்லாகுளம் போலீசில் ஆஜராக வேண்டும்,'' என்றார்.சகுபர் சாதிக், அனிஷ் ராணி உட்பட நான்கு பேருக்கு, ஏற்கனவே ஜாமின் அனுமதிக்க பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X