பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணி அமாவாசைக்கு கோவில்களில் சிறப்பு பூஜை

Added : செப் 07, 2021
Share
Advertisement
அமாவாசையையொட்டி, பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.பொள்ளாச்சியில் உள்ள அனைத்து கோவில்களிலும், ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி பின்பற்றி, சுவாமி தரிசனம் செய்தனர்.
 ஆவணி அமாவாசைக்கு கோவில்களில் சிறப்பு பூஜை

அமாவாசையையொட்டி, பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.பொள்ளாச்சியில் உள்ள அனைத்து கோவில்களிலும், ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி பின்பற்றி, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு, அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.அம்பராம்பாைளயம் ஆற்றில் அமாவாசையையொட்டி, பலரும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.ஆனைமலைஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று ஸர்வ அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டமாக வருவார்கள் என்பதால், கொரோனா பரவலை தடுக்க, தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோவில் வளாகத்துக்கு வெளியில் நின்று சூடம், பத்தி ஏற்றி அம்மனை வழிபட்டனர்.உடுமலைஉடுமலை, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத அமாவாசையான நேற்று, சிவன், விஷ்ணு, பிரம்மாவுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், கொரோனா பாதுகாப்பு வழிமுறையை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்தும், தனி மனித இடைவெளி பராமரித்து வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர் - நிருபர் குழு -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X