பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் மீண்டும் 'சிக்கு... புக்கு...'

Added : செப் 07, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்--ஊட்டி மலை ரயில் இயக்கம், நான்கு மாதங்களுக்கு பின் நேற்று துவங்கியது. கொரோனா பரவலால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. தற்போது பரவல் குறைந்ததால், தெற்கு ரயில்வே நிர்வாகம், சிறப்பு ரயில் என்ற பெயரில் மீண்டும் இயக்க துவங்கியது.மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7:10 மணிக்கு, ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த 136
 ஊட்டியில் மீண்டும் 'சிக்கு... புக்கு...'

மேட்டுப்பாளையம்--ஊட்டி மலை ரயில் இயக்கம், நான்கு மாதங்களுக்கு பின் நேற்று துவங்கியது.

கொரோனா பரவலால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. தற்போது பரவல் குறைந்ததால், தெற்கு ரயில்வே நிர்வாகம், சிறப்பு ரயில் என்ற பெயரில் மீண்டும் இயக்க துவங்கியது.மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7:10 மணிக்கு, ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த 136 பயணியருடன் மலை ரயில் புறப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பு கட்டணம் 600; இரண்டாம் வகுப்புக்கு 295; குன்னுாருக்கு முதல் வகுப்புக்கு 445; இரண்டாம் வகுப்புக்கு 190 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X