பொது செய்தி

தமிழ்நாடு

பணி நியமனத்துக்காக 10 ஆண்டாக நீடிக்கும் போராட்டம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று காலை நடந்தது. அப்போது, பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கை மனுக்களை, கலெக்டரிடம் வழங்கினர்.தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் அளித்த மனு:தி.மு.க., ஆட்சியில் பணி வழங்கப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியில் இழந்து, 10 ஆண்டுகளாக பணி நியமனத்துக்காக மக்கள் நல

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று காலை நடந்தது.

அப்போது, பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கை மனுக்களை, கலெக்டரிடம் வழங்கினர்.தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் அளித்த மனு:தி.மு.க., ஆட்சியில் பணி வழங்கப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியில் இழந்து, 10 ஆண்டுகளாக பணி நியமனத்துக்காக மக்கள் நல பணியாளர்கள் காத்திருக்கிறோம்.கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளில், மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணி நியமனம் செய்ய போராடும் ஒரே ஊழியர்கள், மக்கள் நலப்பணியாளர்கள்.தி.மு.க., ஆட்சியில் பணி நியமனம் செய்யப்பட்ட ஒரே காரணத்தால், அ.தி.மு.க., ஆட்சியில் நாங்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டோம்.

எங்களை பணி நியமனம் செய்து, அரசாணை வெளியிட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.l வாலாஜாபாத் ஒன்றியம் புத்தகரம் கிராம விவசாயிகள் மனு:புத்தகரம் ஊராட்சியில், விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்கிறோம். எங்களின் விவசாய நிலம், ஏரியிலிருந்து வரும் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ளதால், விவசாய நிலத்திற்கு செல்ல வழியே இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

ஏரி நிரம்பினால், மாற்று வழியும் இன்றி, ஏரியின் தண்ணீரில் நடந்த செல்ல வேண்டியுள்ளது; விவசாய பொருட்களை தலையில் சுமந்து செல்கிறோம். கள்ளிப்பட்டு செல்லும் வழியில், மாற்று வழி அமைத்து தர, ஆவண செய்ய வேண்டும்.l நெடுஞ்சாலை துறை அதிகாரி, பெட்ரோல் பங்க் தடையில்லா சான்று வழங்க மறுப்பதாக, திலகவதி என்பவர் அளித்த மனு:கடலுார் மாவட்டம், கூத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நான், காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள சின்னையங்குளம் பகுதியில், பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக, போலீஸ், தீயணைப்பு, சுகாதாரம், வருவாய் துறைகளிடம் தடையின்மை சான்று பெறப்பட்டது.

நெடுஞ்சாலை துறை மட்டும், தடையின்மை சான்று வழங்காமல் இழுத்தடிக்கிறது. பெட்ரோல் பங்க் பகுதி நகராட்சி பகுதி. ஆனால், ஊராட்சி என நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர், உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வருகிறார். பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டத்தை சந்தித்து மன உளைச்சலில் உள்ளோம். தடையின்மை சான்று வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.l படப்பை ஊராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு அளித்த மனு:படப்பை ஊராட்சியில், நாங்கள் 23 பேர், 11 ஆண்டுகளாக துப்புரவு பணி செய்கிறோம்.

மாத ஊதியமாக 3,600 ரூபாய் வழங்குகின்றனர். இப்பணத்தை வைத்து, குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் சிரமப்படுகிறோம். கொரோனா நிவாரண நிதியாக, துப்புரவு பணியாளர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. எங்களுக்கு அந்நிதி வழங்கப்படவில்லை. சம்பள உயர்வு, கொரோனா நிவாரண நிதி வழங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X