பொது செய்தி

தமிழ்நாடு

படம் மட்டும் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு

Added : செப் 07, 2021
Share
Advertisement
தஞ்சாவூர் - அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணம் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, 504 கிலோ அளவிலான துளசி மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், காமராஜ் நகர் பகுதியில், ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெறும்.
 படம் மட்டும் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு

தஞ்சாவூர் - அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணம் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, 504 கிலோ அளவிலான துளசி மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், காமராஜ் நகர் பகுதியில், ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெறும். அந்த வகையில் நேற்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, 11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, 504 கிலோ துளசி மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில், கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியவும், காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X