சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நித்யானந்தா சீடர்கள்; பொதுமக்கள் முற்றுகை

Added : செப் 07, 2021
Share
Advertisement
ராசிபுரம்-ராசிபுரம் அருகே, நித்யானந்தா சீடர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அய்யம் பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அத்தாயி, 53; ஐந்து ஆண்டுகளாக பெங்களூரு நித்யானந்தா ஆசிரமத்தில் வசித்து வந்தார். ராமசாமி பலமுறை ஆசிரமத்திற்கு சென்றும் மனைவி அத்தாயியை பார்க்க முடியவில்லை. இந்நிலையில், வங்கியில் கடன்

ராசிபுரம்-ராசிபுரம் அருகே, நித்யானந்தா சீடர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அய்யம் பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அத்தாயி, 53; ஐந்து ஆண்டுகளாக பெங்களூரு நித்யானந்தா ஆசிரமத்தில் வசித்து வந்தார். ராமசாமி பலமுறை ஆசிரமத்திற்கு சென்றும் மனைவி அத்தாயியை பார்க்க முடியவில்லை. இந்நிலையில், வங்கியில் கடன் உள்ளதாகவும், அத்தாயி வந்து கையெழுத்திட்டால் கடன் பிரச்னை முடியும் எனவும், நித்யானந்தா சீடர்களிடம் ராமசாமி கூறியுள்ளார்.

இதையடுத்து நேற்று அத்தாயியுடன், ஐந்து சீடர்களும் அய்யம்பாளையம் வந்தனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் சீடர்களை முற்றுகையிட்டனர். அத்தாயி, 'நான் இனி ஆசிரமத்திற்கு செல்ல மாட்டேன்; இங்கேயே இருக்கிறேன்' எனக் கூறியதை அடுத்து, சீடர்கள் அத்தாயியை விட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X