மனிதனை பண்படுத்துவது தற்காப்புக்கலை: நீதிபதி

Added : செப் 07, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : தற்காப்புக் கலை, மனிதனை பண்படுத்துவதாக, உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் குறிப்பிட்டார்.மாமல்லபுரத்தில், ம.தி.மு.க., துணை பொதுச்செயலரும், குங்பூ தற்காப்புக்கலை வீரருமான மல்லை சத்யா, மன்சூரியா குங்பூ தற்காப்புக்கலை உள்ளரங்க பயிற்சிக் கூடம் அமைத்துள்ளார். இதை, உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், நேற்று முன்தினம் திறந்து வைத்து, பேசியதாவது:கல்வி என்பது பள்ளி,
 மனிதனை பண்படுத்துவது தற்காப்புக்கலை: நீதிபதி

மாமல்லபுரம் : தற்காப்புக் கலை, மனிதனை பண்படுத்துவதாக, உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் குறிப்பிட்டார்.மாமல்லபுரத்தில், ம.தி.மு.க., துணை பொதுச்செயலரும், குங்பூ தற்காப்புக்கலை வீரருமான மல்லை சத்யா, மன்சூரியா குங்பூ தற்காப்புக்கலை உள்ளரங்க பயிற்சிக் கூடம் அமைத்துள்ளார்.

இதை, உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், நேற்று முன்தினம் திறந்து வைத்து, பேசியதாவது:கல்வி என்பது பள்ளி, கல்லுாரியில் மட்டுமே கிடைப்பது அல்ல. மனிதன் அடிப்படையில் கல்வியானது, மனிதன் தன்னை உணர்வதே. நம்மை நாம் உணரும்போது, மனதிற்கான பயிற்சி பண்பட்டவராக மாற்றி, அதன் மூலம் உங்களையே வெல்பவராக மாறுவீர். இது திருமந்திர பாடல்.மத வளர்ச்சி சார்ந்து அறியப்பட்டுள்ள தற்காப்புக்கலை சார்ந்த பதிவு, கிறிஸ்து பிறப்பதற்கு 3,000 ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தின் மெசபடோமியாவின் பல சித்திரங்களில் காண கிடைத்தது.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, நாகரிகம், அறிவியல் தெரியாத மனிதன் தன்னை உணர்ந்து, தன்னை பாதுகாக்க, தன் மனதை செழுமைப்படுத்த, திறன்கள் மிக்கவராக மாற்றும் செயல்களில் ஈடுபட்டுள்ளான்.தற்காப்புக் கலையின் பல வடிவங்களை, வெறும் கைகளால் உணர முடியும்; ஆயுதங்கள் சார்ந்தும் அறியலாம். இக்கலை, நம்மை திறன்மிக்கவராக மாற்றி, மன பயிற்சிக்கு உட்படுத்தும்.உலகில், நம் மண்ணிற்கான கலையாக இது அறியப்பட்டுள்ளது. என்னையும் உடலாலும், உள்ளத்தாலும், செயலாலும், இளமையாக வைத்திருப்பது இக்கலைதான்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X