பொது செய்தி

தமிழ்நாடு

இல்லம் செல்வோம்... உள்ளம் வெல்வோம்! பா.ஜ., வின் புதிய களப்பணி

Added : செப் 07, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கணியூரில், பா.ஜ., கட்சியின், 'இல்லம் செல்வோம்... உள்ளம் வெல்வோம்' செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.பா.ஜ., கட்சியின் வளர்ச்சிக்காக, பல்வேறு புதிய திட்டமிடல்கள், செயல்பாடுகள் அந்த கட்சியினரால் முன்னெடுக்கப்படுகிறது. இதில், ஒருபகுதியாக, 'இல்லம் செல்வோம்... உள்ளம் வெல்வோம்' என்ற களப்பணி நடக்கிறது.அதாவது, மாவட்டத்திற்கு ஒரு
 இல்லம் செல்வோம்... உள்ளம் வெல்வோம்! பா.ஜ., வின் புதிய களப்பணி

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கணியூரில், பா.ஜ., கட்சியின், 'இல்லம் செல்வோம்... உள்ளம் வெல்வோம்' செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.பா.ஜ., கட்சியின் வளர்ச்சிக்காக, பல்வேறு புதிய திட்டமிடல்கள், செயல்பாடுகள் அந்த கட்சியினரால் முன்னெடுக்கப்படுகிறது. இதில், ஒருபகுதியாக, 'இல்லம் செல்வோம்... உள்ளம் வெல்வோம்' என்ற களப்பணி நடக்கிறது.அதாவது, மாவட்டத்திற்கு ஒரு ஒன்றியத்தை தேர்வு செய்து, அதன்பின்பு அந்தப்பகுதியில் உள்ள, 25 குடும்பங்களுக்கு ஒரு பா.ஜ., தொண்டரை பொறுப்பாளராக நியமித்து, இத்திட்டத்தில், களப்பணியில் ஈடுபடுத்துகின்றனர்.இதில், 25 குடும்பத்தினரின் மனநிலையை கண்டறிந்து, அவர்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்த அளவில், கட்சியின் செயல்பாடுகளை சீரமைக்கின்றனர்.இதற்காக, மடத்துக்குளம் வடக்கு ஒன்றியத்தை, மாவட்ட பா.ஜ., வினர் தேர்வு செய்துள்ளனர். இக்களப்பணியில், செயல்பாடுகள் சரியாக உள்ளதா, மக்களிடம் எதிர்பார்ப்பும், அவர்களின் பிரதிபலிப்பும் எவ்வாறு உள்ளது, என்பதை அறிந்து கொள்வதற்காக கணியூரில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.வடக்கு ஒன்றியதலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில், மாநில துணைத்தலைவர் முருகானந்தம், மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் மோகனப்பிரியா, மாவட்ட துணைத்தலைவர் வடுகநாதன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X