பொது செய்தி

தமிழ்நாடு

மாநில அளவிலான கராத்தே போட்டி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

Added : செப் 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்களை கலெக்டர் ஸ்ரீதர் பாராட்டி கேடயம் வழங்கினார்.தஞ்சாவூரில் குங்பூ சிட்டோரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ இந்தியா சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது.போட்டியில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் வில்மா முதல் இடத்தையும், இம்ரானா பர்ஹத், நித்திஷ்,
 மாநில அளவிலான கராத்தே போட்டி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

கள்ளக்குறிச்சி : மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்களை கலெக்டர் ஸ்ரீதர் பாராட்டி கேடயம் வழங்கினார்.

தஞ்சாவூரில் குங்பூ சிட்டோரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ இந்தியா சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது.போட்டியில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் வில்மா முதல் இடத்தையும், இம்ரானா பர்ஹத், நித்திஷ், அக்நிஷ், அஸ்வின் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.மேலும் மாணவர்கள் அகஸ்தியா, தனுஷ், தனிஸ்கா, தியானேஸ்வர் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்று 'எல்லோ கிரேடு' பெற்றனர்.கள்ளக்குறிச்சியில் நடந்த பாராட்டு விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி கவுரவித்தார். மாணவர்களின் வெற்றிக்கு பாடுபட்ட வி.எஸ்.கோச்சிங் சென்டர் நிர்வாக இயக்குனர் வீரபாபு, பயிற்சியாளர் வசந்தாஸ்ரீ, ஆலோசகர் இப்ராகீம்ஷா, மாவட்ட வில்வித்தை சங்கத் தலைவர் குணசேகரன் ஆகியோரை பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X