பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடியில் மதிய உணவு 2,450 குழந்தைகள் பயன்

Added : செப் 07, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றிய அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில், 2,450 குழந்தைகள் பயனடைகின்றனர்.கொரோனா பரவல் காரணமாக, அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், உணவுக்காக அங்கன்வாடிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று உணவுப்பொருட்கள் வழங்கும் நடைமுறை
 அங்கன்வாடியில் மதிய உணவு 2,450 குழந்தைகள் பயன்

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றிய அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில், 2,450 குழந்தைகள் பயனடைகின்றனர்.கொரோனா பரவல் காரணமாக, அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், உணவுக்காக அங்கன்வாடிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று உணவுப்பொருட்கள் வழங்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.தற்போது, அங்கன்வாடி மையங்களையும் திறந்து குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க, அரசு அறிவுறுத்தியுள்ளது.அவ்வகையில், உடுமலை ஒன்றியத்தில், 143; மடத்துக்குளம் ஒன்றியத்தில், 77, குடிமங்கலம் ஒன்றியத்தில், 75 என, 295 மையங்கள் திறக்கப்பட்டு, குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.இது குறித்து குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வீணா கூறுகையில், ''அங்கன்வாடி மையங்களில், காலை, 11:30 முதல், 12:30 மணி வரை மதிய உணவு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, 2,450 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றியும், இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X