பாலாற்றில் நீர்வரத்து துவக்கம் ஏரிகளுக்கு மடை மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலாற்றில் நீர்வரத்து துவக்கம் ஏரிகளுக்கு மடை மாற்றம்

Added : செப் 07, 2021
Share
காஞ்சிபுரம் : பாலாற்றில் வரும் தண்ணீர், தாமல், கோவிந்தவாடி அகரம் ஏரிகளுக்கு மடை மாற்றப்பட்டுள்ளது.கர்நாடகாவில் துவங்கும் பாலாறு, ஆந்திர மாநிலம் வழியாக, தமிழகத்தில் நுழைகிறது. திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக, வாயலுார் அருகே கடலில் கலக்கிறது.தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் பெய்த கனமழை காரணமாக,
 பாலாற்றில் நீர்வரத்து துவக்கம் ஏரிகளுக்கு மடை மாற்றம்

காஞ்சிபுரம் : பாலாற்றில் வரும் தண்ணீர், தாமல், கோவிந்தவாடி அகரம் ஏரிகளுக்கு மடை மாற்றப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் துவங்கும் பாலாறு, ஆந்திர மாநிலம் வழியாக, தமிழகத்தில் நுழைகிறது. திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக, வாயலுார் அருகே கடலில் கலக்கிறது.தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் பெய்த கனமழை காரணமாக, பாலாற்றின் காவேரிப்பாக்கம் அணைக்கட்டுக்கு, பெருமளவில் தண்ணீர் வந்துள்ளது.காவேரிப்பாக்கம் அணைக்கட்டில் தண்ணீர் நிறைந்ததால், திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, காஞ்சிமாவட்ட எல்லையான பெரும்பாக்கம் வரை, பாலாற்றில் தண்ணீர் வந்துள்ளது.பெரும்பாக்கத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன், கோவிந்தவாடி அகரம் ஏரி, தாமல் ஏரிக்கு தண்ணீர் மடை மாற்றப்பட்டுள்ளது. இந்த ஏரிகளுக்கு தண்ணீர் போக, சிறு ஓடை போல, பெரும்பாக்கம் பாலாற்றில் தண்ணீர் வந்துள்ளது. அந்த கிராமத்தை கடந்து, வெங்கடாவரம், ஓரிக்கை போன்ற பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. தற்போதே பாலாற்றில் தண்ணீர் வந்துள்ளதால், வட கிழக்கு பருவ மழையின்போது, பாலாற்றில் அதிகளவில் தண்ணீர் வரும் என, பொதுப் பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X