பொது செய்தி

தமிழ்நாடு

9 நல்லாசிரியர்களுக்கு விருது கலெக்டர் வழங்கி கவுரவிப்பு

Added : செப் 07, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, கலெக்டர் ஆர்த்தி, எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர், விருது வழங்கி கவுரவித்தனர்.சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், தமிழக அரசு, ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், கடந்தாண்டுக்கான
 9 நல்லாசிரியர்களுக்கு விருது கலெக்டர் வழங்கி கவுரவிப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, கலெக்டர் ஆர்த்தி, எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர், விருது வழங்கி கவுரவித்தனர்.சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், தமிழக அரசு, ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், கடந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் என பலரும் விண்ணப்பித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பித்த ஆசிரியர்களில், எட்டு அரசு பள்ளி ஆசிரியர்கள், ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் என, ஒன்பது பேர், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் வளாக கூட்டரங்கில் நேற்று மாலை நடந்துது.மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் தொகுதி எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ., சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.வெள்ளி பதக்கத்தை எம்.எல்.ஏ., சுந்தர், ஆசிரியர்களுக்கு அணிவித்தார்; பாராட்டு சான்றிதழை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். மேலும், ஊக்கத்தொகையாக, ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் கலெக்டர் வளாக கூட்டரங்கில், விருது பெறும் ஆசிரியர்கள் வர வேண்டும் என, முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கிற்கு ஆசிரியர்களை வரவழைத்தனர். அங்கு அமர்ந்திருந்த 30க்கும் மேற்பட்டோரை, ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் கூட்டிச்சென்றனர். பின் மக்கள் குறைதீர் கூட்டரங்கத்திற்கு சென்றனர். மாறி மாறி அலையவிட்டதால், ஆசிரியர்கள் புலம்பியபடி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X